இன்று வரை தொடரும் மர்மம்… சில்க் ஸ்மிதா குறித்து பிரபல வில்லன் கூறிய செய்தி
1980-களில் கோலிவுட்டில் கவர்ச்சி ராணியாக கலக்கியவர் சில்க் ஸ்மிதா. படத்தில் ஹீரோயின் இருக்கிறாரோ இல்லையோ, சில்க் ஸ்மிதாவின் ஐடம் டான்ஸ் இருந்தால் படம் ஹிட் என்கிற நிலை இருந்தது.
ரஜினி, கமலைவிட சில்க் ஸ்மிதாவின் கால்ஷீட்டை வாங்க தயாரிப்பாளர்கள் வரிசைகட்டி நின்றனர். அந்த அளவுக்கு பிசியான நடிகையாக வலம் வந்தார் சில்க் ஸ்மிதா.
இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது. இவரின் சினிமா வாழ்க்கை வெற்றிகரமாக அமைந்தாலும் இவரின் முடிவு மிகவும் சோகமாக அமைந்தது.
அவரின் மரணம் மர்மம் நிறைந்ததாகவே இருந்தது. இன்றளவும் அவரின் மரணத்தில் உள்ள மர்மம் விலகவில்லை. அவரின் வாழ்க்கை கதையை மையமாக வைத்து டர்ட்டி பிக்சர் என்கிற திரைப்படமும் வெளிவந்தது. அதில் நடிகை வித்யா பாலன், சில்க் ஸ்மிதாவாக நடித்திருந்தார்.
அப்படத்திற்காக அவருக்கு தேசிய விருதும் கிடைத்தது. டர்ட்டி பிக்சரில் சொல்லப்படாத பல விஷயங்கள் சில்க் ஸ்மிதா வாழ்க்கையில் நடந்திருப்பதாக நடிகர் ஆனந்த ராஜ் கூறி இருக்கிறார்.
இதுகுறித்து பேசிய அவர், சில்க் ஸ்மிதா எனக்கு நல்ல தோழியாக இருந்தார். டர்ட்டி பிக்சர் படம் பார்த்தேன், அதில் நிறைய விஷயங்கள் காட்டப்படவில்லை. அந்தப் படம் எடுக்கும் முன் என்னிடம் கேட்டிருந்தால் கூட நிறைய கண்டெண்ட் கொடுத்திருப்பேன். படமும் இன்னும் சூப்பராக வந்திருக்கும். இப்போகூட ஒன்னும் பிரச்சனை இல்லை, நான் சில தகவல்களை கூறுகிறேன். அவர் இறப்பதற்கு முன் தினம் நான் ஒரு கன்னட படத்தில் நடித்து வந்தேன்.
அதில் நான் வில்லனா நடிச்சேன். அப்போ அந்த படத்தில் ஐட்டம் சாங் இருப்பதா சொன்னாங்க. நான் தான் சில்க் ஸ்மிதாவை ஆட வைக்கலாம்னு பரிந்துரை செய்தேன். அவருக்கான சம்பள செக்கையும் வாங்கி கொடுத்துவிட்டேன்.
அந்த பாடல் படமாக்க திட்டமிட்டிருந்த நாளன்று தான் சில்க் ஸ்மிதா இறந்த செய்தி வந்தது. இதனால் ஒட்டுமொத்த படக்குழுவும் அதிர்ந்து போனோம். பின்னர் ஷூட்டிங்கை நிறுத்திவிட்டோம். அதன்பின்னர் சில்க் ஸ்மிதாவுக்கு பதிலா அல்போன்சா அந்த பாடலில் நடனமாடினார் என ஆனந்த ராஜ் கூறினார்.