ஏ.ஆர். ரஹ்மான் ஒரு பாட்டுக்கு வாங்கும் சம்பளம் எத்தனை கோடினு தெரியுமா?
தற்போதைய காலக்கட்டத்தில் தலைசிறந்த பாடகர்களுக்கு லட்சங்களில் சம்பளம் வழங்கப்படுகிறது. அதிலும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு கோடிகளில் சம்பளம் வழங்கப்படுகின்றது.
இசையமைப்பது மட்டுமின்றி ரஹ்மான் அவ்வப்போது பாடல்களையும் பாடிவருகிறார். அவரின் குரலில் வெளிவந்த பல பாடல்கள் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்து எவர்க்ரீன் ஹிட் பாடல்களாக மாறி உள்ளன.
இந்த நிலையில், அவர் ஒரு பாடலுக்கு ரூ. 3 கோடி சம்பளம் பெறுகிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன, இதன் மூலம் இந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் பாடகராக ஏ.ஆர். ரஹ்மான் இருக்கிறார்.
இந்த கட்டணம் இந்தியாவின் மற்ற சிறந்த பாடகர்கள் வாங்கும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
ரஹ்மானுக்குப் பிறகு, இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பாடகி ஸ்ரேயா கோஷல் தான், தற்போது அவர் ஒரு பாடலுக்கு ரூ.25 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது.
சுனிதி சவுகான் மற்றும் அரிஜித் சிங் ஆகியோர் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளனர், இருவரும் ஒரு பாடலுக்கு ரூ. 18-20 லட்சம் வரை சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது..
இந்தியத் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் மற்ற பாடகர்களில் ஷான் மற்றும் சோனு நிகம் ஆகியோர் அடங்குவர், இருவரும் ஒரு பாடலுக்கு ரூ.18 லட்சம் வசூலிக்கின்றனர். நேஹா கக்கர், மிகா மற்றும் ஹனி சிங் ஆகியோர் ஒரு பாடலுக்கு சுமார் 10 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர் என்று கூற்பபடுகிறது.