ஒரு படத்துக்கு 300 கோடி… விஜய்யை ஓவர்டேக் செய்த நடிகர் யார் தெரியுமா?

ஒரு படத்துக்கு 300 கோடி… விஜய்யை ஓவர்டேக் செய்த நடிகர் யார் தெரியுமா?
  • PublishedOctober 29, 2024

இந்திய சினிமா வரலாற்றில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்து வந்த நிலையில், தற்போது அவரை பிரபல நடிகர் பின்னுக்கு தள்ளி உள்ளார்.

முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்துக்காக ரூ.200 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார். அவரை மிஞ்சும் வகையில் நடிகர் விஜய் கோட் படத்திற்காக ரூ. 250 கோடி சம்பளம் வாங்கி இருந்தார். பின்னர் ஒருபடி மேலே போய் தன்னுடைய கடைசி படமான தளபதி 69-ல் நடிக்க நடிகர் விஜய் உச்சபட்ச சம்பளத்தை வாங்கி இருக்கிறார். அவருக்கு அப்படத்திற்காக ரூ.275 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்திய சினிமா வரலாற்றிலேயே அதிக சம்பளம் வாங்கிய நடிகராக உருவெடுத்தார் விஜய்.

தற்போது அவரைவிட அதிக சம்பளம் வாங்கி அதிர்ச்சி கொடுத்துள்ளார் ஒரு மாஸ் ஹீரோ.

அவர் வேறுயாருமில்லை, புஷ்பா என்கிற படம் மூலம் பான் இந்தியா ஹீரோவாக உருவெடுத்த அல்லு அர்ஜுன் தான். அவர் நடிப்பில் தற்போது புஷ்பா 2 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை சுகுமார் இயக்குகிறார்.

இப்படத்தில் நடிக்க தான் நடிகர் அல்லு அர்ஜுன் அதிக சம்பளம் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. புஷ்பா 2 படத்துக்காக நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ரூ.300 கோடி சம்பளம் வழங்கப்பட்டு உள்ளதாக செய்திகள் உலா வருகின்றன.

புஷ்பா 2 திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் 6-ந் தேதி திரைக்கு வர உள்ளது. இந்திய சினிமாவில் அதிக எதிர்பார்க்கப்படும் படமாக புஷ்பா 2 உள்ளதால் அப்படத்தின் ப்ரீ ரிலீஸ் பிசினஸும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

தற்போதைய நிலவரப்படி ரிலீசுக்கு முன்னரே புஷ்பா 2 திரைப்படம் ரூ.900 கோடி வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அடுத்த ஆயிரம் கோடி வசூலிக்கும் படமாக புஷ்பா 2 இருக்கும் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *