11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  • PublishedMay 14, 2024

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் பாடகி சைந்தவி ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்வதாகவும் இருவரும் இது குறித்து அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்றும் முன்னதாக செய்திகள் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் நேற்றைய தினம் ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி ஆகிய இருவரும் தங்களது சமூக வலைத்தளங்களில் ஒருவரை ஒருவர் பிரிந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இதனை அடுத்து ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி ஆகியோரின் 11 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருக்கின்றது.

இது குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி ஆகியோர் தங்களது சமூக வலைத்தளத்தில் ”திருமணம் ஆன 11 ஆண்டுகளுக்குப் பிறகு நீண்ட யோசனைக்கு பின்னர் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளோம்.

ஊடகங்கள், நண்பர்கள் மற்றும் இரசிகர்கள் எங்களது தனி உரிமையை புரிந்து கொண்டு இந்த கடினமான நேரத்தில் எங்களுக்கு ஆதரவு அளிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிட்டுள்ளனர்.

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *