மகாபாரத கதையை கையில் எடுத்தார் லிங்குசாமி
ரசிகர்கள் விரும்பும் வகையிலான படங்களை கொடுத்து வந்தவர் இயக்குனர் லிங்குசாமி. பின்னர் பட தயாரிப்பிலும் இறங்கி தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்தவர்.
ஒரே நேரத்தில் உத்தம வில்லன் படத்தை தயாரித்ததன் மூலமாகவும் அஞ்சான் படத்தை இயக்கியதன் மூலமாகவும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்தார்.
அதிலிருந்து மீண்டு வந்து விடலாம் என தெலுங்கு இளம் நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து வாரியர் என்கிற படத்தை இயக்கினார். அந்த படமும் எதிர்பார்த்த வெற்றியை அவருக்கு தரவில்லை.
கார்த்தியை வைத்து இவர் இயக்கிய பையா திரைப்படம் சமீபத்தில் ரீ ரிலீஸ் செய்யப்பட்டு மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக மகாபாரதம் கதையை தழுவி அர்ஜுனன், அபிமன்யு என்கிற இரண்டு கதாபாத்திரங்களை வைத்து இரண்டு பாகங்களாக ஒரு சரித்திர படத்தை இயக்கும் வேலைகளை ஈடுபட்டுள்ளார் லிங்குசாமி.
தமிழில் இதற்கான கதை எழுதும் வேலைகளில் எழுத்தாளர் ஜெயமோகனும், ஹிந்தியில் இதற்கான வேலைகளை பிரபல பாலிவுட் கதாசிரியர் ஒருவரும் கவனித்து வருகின்றனர்.
மிகப்பெரிய பாலிவுட் நிறுவனம் ஒன்று இந்த படத்தை தயாரிக்க உள்ளதாக லிங்குசாமி கூறியுள்ளார்.