கூலி டீசரில் இவ்வளவு இருக்கா? சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகி
சூப்பர் ஸ்டாரின் கூலி டீச்சர் நேற்று மாலை வெளியானது. ரசிகர்கள் அதை வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.
அதிலும் டீசரில் இருந்த பல விஷயங்கள் இப்போது சோஷியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது.
அதன்படி 80 காலகட்டத்தில் ரஜினியின் நடிப்பில் வெளியான தீ, உழைப்பாளி போன்ற படங்களை டீசர் நினைவூட்டுகிறது. அதிலும் இதில் இடம் பெற்று இருந்த மது உண்டு மாது உண்டு என்ற வசனம் ரங்கா படத்தில் இடம்பெற்றிருக்கும்.
ஆனால் அதற்கு முன்பே ரஜினியின் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வரும் ஜெகமே தந்திரம் பாடலில் வரும். அதை தற்போது நெட்டிசன்கள் தேடி கண்டுபிடித்து வைரல் செய்து வருகின்றனர்.
மேலும் அனிருத்தின் பின்னணி இசையில் டிஸ்கோ பாடல் வேற லெவலில் இருக்கிறது. இது ரஜினியின் தங்க மகன் படத்தில் இடம்பெற்று இருக்கும்.
இப்படி 80ஸ் சம்பவங்கள் டீசரில் இருக்கிறது. அதே போல் டைட்டில் கார்டு விஷயத்திலும் லோகி நான் தனி என நிரூபித்துள்ளார்.
வழக்கமாக ப்ளூ கலரில் தான் சூப்பர் ஸ்டார் டைட்டில் வரும். ஆனால் கூலி டீசரில் அது சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டிருந்தது. அதேபோல் இது தங்க கடத்தல் கதையாக இருக்கும் என்பதும் புரிகிறது.
ஆக மொத்தம் கமலுக்கு ஒரு விக்ரம் என்றால் சூப்பர் ஸ்டாருக்கு இந்த கூலி. அதிலும் ஆண்டவர் சொல்லும் ஆரம்பிக்கலாமா வசனம் போல் சூப்பர் ஸ்டார் சொன்ன முடிச்சிடலாமா என்ற வசனமும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.