இந்திய மைக்கேல் ஜாக்சனின் புதிய படம் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்

இந்திய மைக்கேல் ஜாக்சனின் புதிய படம் என்ன தெரியுமா? வெளியானது அப்டேட்
  • PublishedJune 19, 2024

சினிமாவில் நடிகராக அறிமுகமாவதற்கு முன்னரே நடன இயக்குநராக பணியாற்றி கடந்த 1994ஆம் ஆண்டு வெளியான இந்து படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் பிரபுதேவா.

அதே ஆண்டு வெளியான காதலன் படத்திலும் கதாநாயகனாக நடித்தார். அதைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். குறிப்பாக ரோமியோ, மின்சார கனவு, வானத்தைப்போல, நாம் இருவர் நமக்கு இருவர், ஜேம்ஸ் பாண்ட், சார்லி சாப்ளின் உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.

இவரது அசாத்திய நடனத் திறமையால் தமிழ் சினிமா மட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமாவிலும் ,வட இந்திய சினிமாவிலும் என ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலிம் புகழ்பெற்றவராக விளங்கினார். இதன் காரணமாக இவரை இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் ரசிகர்கள் புகழ்ந்தனர்.

தற்போது பிரபுதேவா விஜயின் தி கோட் படத்தில் நடித்து வருகின்றார். இந்நிலையில் பிரபு தேவாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மூன் வாக் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. பிகைண்ட்வுட்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் நிஷ்மா செங்கப்பா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

மனோஜ் இயக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *