“Star” இந்த நடிகரின் கதை தானா? கண்ணீருடன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிரபலம்

“Star” இந்த நடிகரின் கதை தானா? கண்ணீருடன் ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பிரபலம்
  • PublishedMay 12, 2024

கடந்த இரு தினங்களுக்கு முன் இயக்குனர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் வெளிவந்த ஸ்டார் படம் அனைத்து திரையரங்களிலும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு வருகிறது.

இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்றால் லால் மற்றும் கவின் நடிப்பு என்றே சொல்லலாம். அத்துடன் யுவனின் மியூசிக் பட்டைய கிளப்பி விட்டது.

தன்னால் முடியாததை தன் மகன் செய்து காட்ட வேண்டும் என்று சொல்வதற்கு ஏற்ப லால் ஆசை நிராசையாக போனதால் தன்னுடைய மகனை வைத்து நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்று தந்தையின் போராட்டத்தை துல்லியமாக காட்டப்பட்டிருக்கிறது.

அந்த வகையில் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்பதற்காக கவின் எடுக்கும் முயற்சியில் தோல்விகளையும் துன்பங்களையும் சந்தித்து கனவை எப்படி நிறைவேற்றுகிறார் என்பதுதான் கதையாக இருக்கிறது. இந்த கதையில் முக்கியமான கதாபாத்திரத்தில் காதல் சுகுமார் நடித்திருக்கிறார்.

இதைப்பற்றி சமீபத்தில் காதல் சுமார் அளித்த பேட்டியில் இயக்குனர் என்னிடம் எனக்கான கதாபாத்திரம் சொல்லும் பொழுது சினிமா திறமை இல்லாதவனை கோபுரத்தில் ஏற்றி விடும். அதேபோல திறமையோடு காத்திருப்பவர்களை காலில் போட்டு மிதிக்கும். ஆனால் கடைசிவரை அவன் போராடி லட்சியத்தில் எப்படி சாதிக்கிறான் என்பது தான் ஒரு கதையாக எடுக்கிறேன்.

இதில் உங்களுடைய பங்களிப்பு மிக முக்கியமாக இருக்கும் என்று கூறினார். அதன்படி இந்த படத்தின் கதையை பார்க்கும் பொழுது என்னுடைய பயோபிக் கதையை அப்படியே எடுத்தது போல் எனக்கு ஒரு உணர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது என்று கண்ணீருடன் ஆதங்கத்தில் பேட்டி அளித்திருக்கிறார். இது இவருக்கு மட்டுமில்லாமல் சினிமாவில் இருக்கும் எத்தனையோ ஆர்டிஸ்ட்களுக்கும் பொருந்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *