அஜித்திற்கும் இவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?: புகழ்ந்துதள்ளும் இரசிகர்கள்!

அஜித்திற்கும் இவருக்கும் இப்படி ஒரு ஒற்றுமையா?: புகழ்ந்துதள்ளும் இரசிகர்கள்!
  • PublishedMarch 17, 2023

நடிகர் அஜித் எப்பொழுதும் எளிமையாக இருப்பவர். பந்தா இல்லாத நடிகர் என்று சொன்னால் மிகையாகாது. இவருடைய நடிப்பில் அண்மையில் வெளிவந்த  துணிவு திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றியை கொடுத்தது.

இதனையடுத்து மகிழ்திருமேனி இயக்கத்தில் ஏகே 62 என்ற பெயரிடப்படாத படத்தில் நடிக்கவுள்ளார். இந்த திரைப்படத்திற்கான உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவையொருப்புறம் இருக்க தள அஜித் சோசியல் மீடியாக்களில் இருந்து ஒதுங்கியே இருப்பவர். பெரிய அளவில் இவருடைய புகைப்படங்கள் மீடியாக்களில் வெளியாகுவதில்லை. அதேபோல் வெற்றி கொண்டாட்டங்களில் களந்துக்கொள்ளமாட்டார்.

இவரைபோலவே 80களில் வாழ்ந்த ஒரு நடிகரும், இருந்தாராம். அவர்தான் நம் நவரச நாயகன் கார்த்திக். இவரும் பெரிய அளவில் மீடியாக்களில் கலந்துகொள்ள மாட்டாராம். படம் வெற்றிபெற்றாலும், வெற்றி நிகழ்ச்சிகளிலும் பங்குகொள்ள மாட்டாராம். அது மாத்திரம் இல்லாமல் மற்ற நடிகர்களுடனும் பொது இடங்களுக்கு செல்லவும் மாட்டாராம். இவர்கள் இருவருக்கும் உள்ள ஒற்றுமையை குறிப்பிட்டு இரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *