‘இந்த அன்பை நான் உணர்கிறேன்’: 13 வருட திரைப்பயணம் குறித்து சமந்தா ருவிட்!
‘இந்த அன்பை நான் உணர்கிறேன்’: 13 வருட திரைப்பயணம் குறித்து சமந்தா ருவிட்!
முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை சமந்தாவின் திரைவாழ்க்கை ஆரம்பித்து 13 வருடங்கள் ஆகியுள்ளது.
தமிழில் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்தில் நந்தினி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த 2010 ஆண்டு பெப்ரவரி 26ம் திகதி வெளியானது.
இந்நிலையில் சமந்தா தன்னுடைய 13 ஆண்டுகால திரைப்பயணத்தை பூர்த்தி செய்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்கள் சமந்தாவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இது தொடர்பாக நடிகை சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இந்த அன்பை நான் உணர்கிறேன்… இதுதான் என்னை தொடர வைக்கிறது… இப்போதும் என்றும், நான் என்னவாக இருக்கிறேன் என்பது உங்களால் தான். 13 ஆண்டுகள், நாம் இப்போதுதான் தொடங்குகிறோம்’ என்று பதிவிட்டுள்ளார்.
இதேவேளை தற்போது அவர், விஜய் தேவர்கொண்டாவுடன் குஷி திரைப்படத்தில் நடத்தி வருகிறார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.