இரகசியமாக நடத்தப்பட்ட AK62 படத்தின் பூஜை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு

இரகசியமாக நடத்தப்பட்ட AK62 படத்தின் பூஜை? விரைவில் வெளியாகும் அறிவிப்பு
  • PublishedFebruary 27, 2023

முன்னணி நடிகரான அஜித் குமார், இயக்குனர் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார். இதற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இதனையடுத்து பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜனவரி 11ம் திகதி துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

அதனைத் தொடர்ந்து துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித்குமார் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியது.

இந்த நிலையில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் 62 படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது.

மேலும் இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும், அதற்காக சமீபத்தில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியது.

அந்த வகையில் அஜித்குமார் நடிக்கும் 62 வது படத்திற்கு ‘ரணம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *