கங்குலியின் பையோபிக்கில் நடிக்கும் ரன் நடிகர் : விரைவில் வெளியாக இருக்கும் கலக்கலான அப்டேட்

கங்குலியின் பையோபிக்கில் நடிக்கும் ரன் நடிகர் : விரைவில் வெளியாக இருக்கும் கலக்கலான அப்டேட்
  • PublishedFebruary 27, 2023

கங்குலியின் பையோபிக்கில் நடிக்கும் ரன் நடிகர் : விரைவில் வெளியாக இருக்கும் கலக்கலான அப்டேட்
கங்குலியின் வாழ்க்கை கதை படமாக்கப்பட இருக்கிறது.
சமீபத்தில் பல பிரபலங்களின் வாழ்க்கை கதை படமாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் கிரிக்கெட் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், மகேந்திர சிங் தோனி போன்றோரின் வாழ்க்கை கதை படமாக்கப்பட்டது. தற்போது இந்த பையோபிக் வரிசையில் கங்குலியின் வாழ்க்கை கதையும் படமாக்கப்பட இருக்கிறது
கடந்த 2019 ஆம் வருடமே கங்குலியின் வாழ்க்கை கதை படமாக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இந்த படம் பெரும் பொருட்செலவில் உருவாக்கப்பட இருப்பதாகவும், நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன் அல்லது ரன்பீர் கபூர் இந்த படத்தில் கங்குலியாக நடிப்பார்கள் என்று கூட சொல்லப்பட்டது. சமீபத்தில் கங்குலியை இந்த தகவலை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
இதற்கிடையில் இந்த பையோபிக்கில் கங்குலியின் கேரக்டரில் பாலிவுட்டின் முன்னணி ஹீரோ ரன்பீர் கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் நடிகர் ரன்பிர் கபூரும் இந்த படத்தை பற்றி பேசியிருக்கிறார். ஆனால் எந்த தகவலையும் அவர் அதிகாரபூர்வமாக சொல்லவில்லை.

80ஸ் மற்றும் 90ஸ் கிட்ஸ்களுக்கு ரொம்பவும் பிடித்த கிரிக்கெட் வீரரான கங்குலியின் வாழ்க்கை கதை திரைப்படமாக உருவாக இருப்பது மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
இன்றைய கிரிக்கெட் அணி வாரியத்தின் தலைவராக இருப்பவர் தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி.
இந்திய கிரிக்கெட் அணியை உலக தரத்திற்கு கட்டமைத்தவர் தான் கங்குலி. இவரை கிரிக்கெட் ரசிகர்கள் இன்றுவரை அன்புடன் ‘தாதா’ என்று தான் செல்லமாக குறிப்பிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *