கமலுடன் அனைத்தையும் பகிர்ந்த சிம்ரன்!! அட இதையுமா பகிர்ந்து கொண்டார்???

கமலுடன் அனைத்தையும் பகிர்ந்த சிம்ரன்!! அட இதையுமா பகிர்ந்து கொண்டார்???
  • PublishedMay 13, 2023

திரைத்துறையில் இருப்பவர்களில் அதிகம் சர்ச்சைகளை சம்பாதித்தது கமல் ஹாசனாகத்தான் இருக்க முடியும். தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பலரிடம் பல முறை விமர்சனத்தை சந்தித்திருக்கிறார்.

ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாத கமல், தனது மனம் எப்படி வாழ விருப்பப்பட்டதோ அதன் போக்கில் தன் வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்டவர். அந்த தைரியத்தையும் ஒருதரப்பினர் பாராட்டிவருகின்றனர்.

கமல் ஹாசன் வாணி கணபதியை திருமணம் செய்துகொண்டார். அந்த உறவிலிருந்து வெளியேறிய கமல் அடுத்ததாக ரேகாவை திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும் ஸ்ருதிஹாசன், அக்‌ஷரா ஹாசன் என்ற இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

என்ன நினைத்தாரோ தெரியவில்லை ரேகாவையும் பிரிந்தார் கமல். தொடர்ந்து கௌதமியுடன் லிவிங் டூ கெதரில் வசித்தார்.

ஆனால் அந்த உறவும் பாதியில் முடிந்தது. இதற்கிடையே பல நடிகைகளுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டிருக்கிறார் கமல் ஹாசன். அந்த நடிகைகளில் ஒருவர்தான் சிம்ரன்.

அழகு, நடிப்பு என அனைத்தையும் ரசித்த ரசிகர்கள் சிம்ரனை கனவுக்கன்னியாக மாற்றினர். முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்ட சிம்ரன், கமல் ஹாசனுடன் பம்மல் கே சம்பந்தம், பஞ்ச தந்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

அந்த சமயத்தில் கமல் ஹாசனும், சிம்ரனும் காதலிப்பதாக பேச்சு ஓடியது. அதை வைத்து வைரமுத்துவே, பஞ்ச தந்திரம் படத்தில் உன்னோடு காதல் என்று பேச வைத்தது நீயா இல்லை நானா என்ற பாடலையும் எழுதியிருந்தார்.

சிம்ரனுடன் கமல் ஹாசன் ஓவர் நெருக்கம் காட்டினாராம். இரண்டு பேரும் லிவிங் டூ கெதரிலும் சில காலம் வாழ்ந்தனராம். அப்போது சிம்ரனும், கமலும் சேர்ந்து நடித்த ஒரு படத்தில் சிம்ரனின் சம்பளத்தை கமல் ஹாசன் பெற்றுக்கொண்டாராம். தனது சம்பளம் குறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்ட சிம்ரனிடம், உங்கள் சம்பளத்தை கமல் சார் வாங்கிவிட்டார் என்ற பதில் வந்ததாம்,

கமல் ஹாசனும் தன்னுடன் நெருங்கி பழகுகிறாரே என்று அதை சாதாரணமாக எடுத்துக்கொண்டாராம் சிம்ரன். ஒரு கட்டத்தில் கமலிடமிருந்து விலக நினைத்த சிம்ரன் தன்னுடைய பாதுகாப்புக்காக ராஜு சுந்தரத்தை காதலிக்கத் தொடங்கினாராம்.

ஆனால் அந்தக் காதலும் ஏனோ காரணத்தால் பிரேக் அப் ஆகிவிட்டது. இந்தத் தகவலை பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பகிர்ந்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *