கையில் பலத்த காயத்துடன் சமந்தா பதிவிட்ட போட்டோ… பதறிய ரசிகர்கள் !

கையில் பலத்த காயத்துடன் சமந்தா பதிவிட்ட போட்டோ… பதறிய ரசிகர்கள் !
  • PublishedMarch 1, 2023

நடிகை சமந்தா கையில் ரத்தக்காயங்களுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா விவகாரத்திற்கு பின், பலவிதமான மன கஷ்டங்களை கடந்துள்ளார். மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா ஆறு மாதங்களுக்கு மேல் எழுந்து நடக்கக் கூட முடியாமல் அவதிப்பட்டு வந்தார். பல சிகிச்சைகளுக்குப் பின்னர் மீண்டும் அதில் இருந்து மீண்டு, பழையபடி படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார்.

நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் யாசோதா படம் வெளியானது. இந்த படத்தில் சமந்தா கர்ப்பிணியாக நடித்திருந்தார். வாடகைத் தாய் முறை மூலம் நடக்கும் முறைகேடுகளை கண்டுபிடிக்கும் பெண்ணாக சமந்தா அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்பி இருந்தார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

யசோதா படத்தைத் தொடர்ந்து, காவியக் காதல் திரைப்படமான சாகுந்தலம் படத்தில் சாகுந்தலையாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம்,மலையாளம் என 5 மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக இப்படமாக 3டியில் வெளியாக உள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி பல முறை அறிவிக்கப்பட்டு பின்னர் தள்ளிவைக்கப்பட்டது. தற்போது இப்படம், ஏப்ரல் 14ந் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கையில் ரத்த காயத்துடன் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். மேலும், அதற்கு கேப்ஷனாக, இது உலகத்தின் பார்வைக்கு காயமாக தெரியலாம், ஆனால் நாங்கள் இதை நகைகள் போன்று நினைப்பதாக பதிவித்துள்ளார். இந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் பதறிப் போய் என்ன ஆச்சு என கேட்டு வருகின்றனர்.

சமந்தா தற்போது நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக குஷி படத்தில் நடித்து வருகிறார். ஷிவா நிர்வாணா இயக்கத்தில் வருவாகி வரும் இப்படத்தில், ஜெயராம், சச்சின் கடேகர், முரளி சர்மா, லட்சுமி, ரோகிணி, சரண்யா உட்பட பலர் நடித்து வருகின்றனர். இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மொழிகளில் வெளியாக உள்ளது. மேலும், பாலிவுட் தொடரான சீட்டாடலில் சமந்தா நடித்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *