செப்டம்பரில் வெளியாகும் சுதா கொங்கராவின் திரைப்படம்!

செப்டம்பரில் வெளியாகும் சுதா கொங்கராவின் திரைப்படம்!
  • PublishedMarch 22, 2023

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படம் கடந்தாண்டு ஓடிடி-யில் ரிலீசாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இப்படத்தின் கதையானது ஏர் டெக்கான் விமானத்தின் நிறுவனரான கே.ரா.கோபிநாத்தின் தழுவல் ஆகும். இந்தப் படத்தை தற்போது இந்தியில் ரீமேக் செய்கின்றனர். இதில் மாறன் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். இதையும் சுதா கொங்கரா தான் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் திகதி  குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் மாதம் முதலாாம் திகதி படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த திரைப்படத்திற்கான டைட்டில் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில், படத்தின் வெளியீட்டு திகதியை அறிவித்துள்ளது இரசிகர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *