ஜூனியர் என்டிஆரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

ஜூனியர் என்டிஆரின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
  • PublishedMarch 24, 2023

தாரக் என்னும் இயற்பெயர் கொண்ட ஜூனியர் என்டிஆர் ஆந்திர பிரதேச்தின் முன்னாள் முதல்வர் என்டி ராமாவின் பேரன் ஆவார்.

சினிமா துறையில் ஹீரோவாக மட்டுமல்லாமல் குச்சிப்புடி நடன கலைஞரும், பின்னணி பாடகராகவும் அறியப்படுபவர்.  குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் தெலுங்கு சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கிறார்.

இயக்குனர் ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இவர் இருந்தார். தற்போது இவர் நடித்த இந்த படம் ஆஸ்கார் விருது வாங்கி இருக்கிறது. இந்த படத்தின் அறிமுக காட்சியை பார்த்து ஹாலிவுட் இயக்குனர்களே மிரண்டு போயிருக்கின்றனர்.

ஆஸ்கார் வெற்றிக்குப் பிறகு ஜூனியர் என்டிஆர் தன்னுடைய அடுத்த கட்ட வளர்ச்சிக்கு தயாராகிக் கொண்டிருக்கிறார். இதுவரை 35 லிருந்து 40 கோடி வரை சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இவர் தன்னுடைய சம்பளத்தை 50 கோடியாக உயர்த்த திட்டமிட்டு இருக்கிறாராம்.

இப்படி தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் இவரின் சொத்து மதிப்பு தான் தற்போது ஆந்திரா மீடியாக்களால் பேசப்பட்டு வருகிறது.

இவர் தனக்கென சொந்தமாக ஜெட் விமானம் வைத்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 550 கோடி என்று கூறப்படுகிறது. இவருக்கு சொந்தமாக பல பங்களாக்கள் ஹைதராபாத்தில் இருக்கின்றன. இப்படி கோடி கணக்கில் சொத்துக்களோடு ராஜ வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.

என்னதான் அவர் 50 கோடி சம்பளம் வாங்குவதாக பேசப்பட்டாலும், தமிழ் ஹீரோக்கள் வாங்கும் சம்பளத்துடன் ஒப்பிடுகையில் அவர் பின்னதங்கி இருக்கிறார் என்பதுதான் நிதர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *