நீச்சல் உடையில் ஆட்டம் போட்ட அமலா பால்..விமர்சனம் தெரிவித்துள்ள ரசிகர்கள்

நீச்சல் உடையில் ஆட்டம் போட்ட அமலா பால்..விமர்சனம் தெரிவித்துள்ள ரசிகர்கள்
  • PublishedMarch 14, 2023

நடிகை அமலா பால், பிகினியில் நீச்சல் உடையில் ஆட்டம் போட்டு ரசிகர்களை சூடேற்றி உள்ளார். நடிகை அமலா பால் சினிமாவுக்கு வந்த குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களின் படங்களில் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

பின் இயக்குனர் ஏ.எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், திருமணமான ஒரு சில வருடத்திலேயே விவாகரத்து பெற்று அவரை விட்டு பிரிந்தார்.

விவாகரத்துக்கு பின் படங்களில் நடிக்கத் தொடங்கிய அமலா பால், வேலையில்லா பட்டதாரி 2,பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன் போன்ற திரைப்படங்களில் நடித்து பெயர் எடுத்தார். பின் ரத்தினகுமார் இயக்கிய ஆடை படத்தில், ஓவர் கவர்ச்சி காட்டி சர்ச்சையில் சிக்கினார். பலகாட்சிகளில் ஆடையே இல்லாமல் நடித்த போதும் அந்த படங்கள் பெரிதாக கை கொடுக்காததால், படவாய்ப்பை இழந்தார்.

இதனால், மன அழுத்தத்தில் இருந்த அமலா பால் ஆண் நண்பருடன் இரவு பார்ட்டி, மது பாட்டில் கையுமாக குத்தாட்டம் போட்டு, இருந்த நல்ல பெயரையும் கெடுத்துக்கொண்டார். இதையடுத்து, கடாவர் படத்தில், தடயவியல் அறுவை சிகிச்சை நிபுணராக நடித்தது மட்டுமில்லாமல், படத்தைத் தானே தயாரித்தும் இருந்தார். இந்த படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது.

சோசியல் மீடியாவில் தன்னுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வரும் நடிகை அமலா பால், கடந்த மாதம் முழுவதும் ஆன்மீக பயணம் மேற்கொண்டு பக்தி பழமாக இருந்தார். கடந்த சில நாட்களாக பிகினியில் பீச்சில் ஓவர் ஆட்டம் போட்டுள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் என்ன இப்படி காட்டுறீங்க என்றும், இதெல்லாம் ரொம்ப ஓவர்தான் என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

அமலா பால், தற்போது போலா என்ற இந்தி படத்தில் நடித்துள்ளார். இதில், அமலா பால், அஜய் தேவ்கனின் மனைவியாக நடித்துள்ளார். கைதி படத்தின் இந்தி ரீமேக்கான இப்படம் இந்த மாதம் 30ம் திகதி வெளியாக உள்ளது. த்விஜா, ஆடுஜீவிதம், அதோ அந்த பறவை போல போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *