பிரபல நடிகரின் அண்ணனை மூன்றாவதாக கரம் பிடித்த தெலுங்கு நடிகை : சமூகவலைத்தளத்தில் திட்டி வரும் நெட்டிசன்கள்!

பிரபல நடிகரின் அண்ணனை மூன்றாவதாக கரம் பிடித்த தெலுங்கு நடிகை : சமூகவலைத்தளத்தில் திட்டி வரும் நெட்டிசன்கள்!
  • PublishedMarch 11, 2023

கர்நாடாக நடிகை பவித்ரா லோகேஷின் திருமணம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல விமர்சனங்களை பெற்றுள்ளது.

தெலுங்கு, கன்னடம், தமிழ் உள்ளிட்ட பல மொழிப் படங்களில் நடித்துள்ள பவித்ரா லோகேஷ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் சகோதரர் நரேஷை மூன்றாவதாக திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.

நரேஷ் ஏற்கனவே மூன்று திருமணங்களை செய்து விவகாரத்து பெற்றவராவார். கடந்த சில காலமாக இருவரும் திருமணம் செய்துக்கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. இருப்பினும் இருவரும் இந்த தகவலை மறுத்து வந்தனர்.

இந்நிலையில், இவர்கள் இருவரும் ஒன்றாக இரகசியமாக வாழ்ந்து வருவதை நரேஷின் மூன்றாவது மனைவி அம்பலப்படுத்தியிருந்தார். இதனையடுத்து நரேஷ் மற்றும் பவித்ரா புதிய காணொளி ஒன்றை வெளியிட்டு திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இதனையடுத்து அவர்களுடைய திருமணம் நேற்று நடைபெற்றது. இது சம்பந்தமான ஒளிப்படங்கள், காணொலிகள் வெளியாகி பல்வேறு விமர்சனங்களை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *