பெற்றோர்கள் குறித்து உருக்கமாக பேசிய ராஷ்மிகா மந்தனா!

பெற்றோர்கள் குறித்து உருக்கமாக பேசிய ராஷ்மிகா மந்தனா!
  • PublishedMarch 23, 2023

தமிழ்,  தெலுங்கு,  கண்ணட படங்களில் முன்னணி இளம் நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா.

இவருடைய வளர்ச்சி, வாழ்க்கை குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் தனது பெற்றோர் குறித்தும், இளமைக்கால வறுமை குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

ராஷ்மிகாவின் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குறித்த பேட்டியில்,  திரைத்துறையில் உங்களின் வளர்ச்சி குறித்து பெற்றோர் பெருமை கொள்கிறார்களா என்ற கேள்விக்கு ராஷ்மிகா பதில் கூறியதாவது ‘அப்படி ஒன்றும் இல்லை. காரணம் எனது பெற்றோர் சினிமா துறையில் இருந்து விலகியே இருக்கிறார்கள். அவர்களின் மகளாகிய நான் என்ன செய்கிறேன் என்று அவர்கள் அறிந்து கொள்வதில்லை.

ஆனால் எனக்கு விருதுகள் கிடைத்தால் அது அவர்களுக்கு பெருமையாக இருக்கும். எனவேநான் துறையில் சிறப்பாக செயல்பட்டு விருதுகள் வாங்கி அவர்களை பெருமைபடுத்த வேண்டும்.

என்னை அவர்கள் எந்த குறையும் இன்றி வளர்த்தனர். குழந்தையாக இருக்கும் போது அவர்களால் முடிந்த அனைத்தையும் எனக்கு செய்து கொடுத்தனர். அதற்கு நான் நன்றி கடன் பட்டவள். எனவே இப்போது நான் அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டிய தருணம்’ என்றுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *