மீண்டும் ஹீரோவாகும் சூரி – வெளியானது கொட்டுக்காளி படத்தின் டீசர்

மீண்டும் ஹீரோவாகும் சூரி – வெளியானது கொட்டுக்காளி படத்தின் டீசர்
  • PublishedMarch 10, 2023

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி ஹீரோவாக நடிக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தின் டீசர் வெளியானது. படத்தை பி.எஸ்.வினோத்ராஜ் இயக்கியிருக்கிறார்.

நடிகர் சூரி பல காலமாக சினிமாவில் இருப்பவர். எப்படியாவது சினிமாவில் வென்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் சினிமாவுக்குள் நுழைந்தவருக்கு வாய்ப்புகள் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை. இதனையடுத்து சின்ன சின்ன ரோல்களில் தலைகாட்டினார் சூரி.இந்நிலையில் சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் நடித்த வெண்ணிலா கபடி குழு படத்தில் நடித்தார் சூரி. அந்தப் படத்தில் புரோட்டா சாப்பிட்ட காட்சியை தனது நடிப்பின் மூலம் சூரி அடுத்தக்கட்டத்துக்கு எடுத்து செல்ல ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அவரது வெகுளித்தனமான முகமும், வசன உச்சரிப்பும் ரசிக்கும்படியாகவே இருந்தன.

இதனையடுத்து அவருக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்தன. நகைச்சுவை நடிகராக ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். அவரது காமெடி ரசிக்கும்படியாக இருந்தாலும் சிலர் அதனை விமர்சிக்கவும் செய்தனர். இருந்தாலும் சூரிக்கு பட வாய்ப்புகள் குறையவில்லை. இதற்கிடையே பெரும்பாலான காமெடி நடிகர்கள் ஹீரோவாக மாறிவிட்ட சூழலில் சூரி எப்போது ஹீரோவாக மாறுவர் என்ற கேள்வி எழுந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *