ராணா டகுபதிக்கு இவ்வளவு பிரச்சினைகளா? : முதல் முறையாக வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் இரசிகர்கள்!

ராணா டகுபதிக்கு இவ்வளவு பிரச்சினைகளா? :  முதல் முறையாக வெளியிட்ட தகவலால் அதிர்ச்சியில் இரசிகர்கள்!
  • PublishedMarch 19, 2023

பாகுபலி திரைப்படம் மூலம் பெருமளவு இரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் ராணா டகுபதி. இவர் அண்மையில் நிகழ்வொன்றில் கலந்துகொண்டு தன்னுடைய உடல் உபாதைகள் குறித்து வெளிப்படுத்தியிருக்கிறார்.

இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

அதாவது ராணா டகுபதிக்கு சிறுவயதில் இருந்தே பார்வைக் குறைப்பாடு இருப்பதாக கூறியுள்ளார்.   ‘இளம் வயதில் தனது வலது கண்ணில் பார்வை குறைபாடு இருந்ததாகவும் இதனையடுத்து கண்களில் கார்னியல் டிரான்ஸ்பிளான்ட் செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

மற்றொரு பேட்டியொன்றில் பேசிய அவர்,  சில ஆண்டுகளுக்கு முன் தனக்கு திடீரென பிபி அதிகரித்து இதயத்தில் அடைப்பு ஏற்பட்டு சிறுநீரகம் செயலிழந்ததாக குறிப்பிட்டார். இதனால் பக்கவாதம் ஏற்பட 70 சதவிகித வாய்ப்பு இருந்ததாகவும் இறந்து போக 30 சதவிகித வாய்ப்பு இருந்ததாகவும் மருத்துவர்கள் தன்னிடம் தெரிவித்தாக குறிப்பிட்டிருக்கிறார்.

ராணாவின் இந்த கருத்து இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *