லோகேஷின் இயக்கத்தில் கேமியோ ரோலில்கூட நடிக்கத் தயார்.. நடிகர் ஜெயம் ரவி பளீச்!

லோகேஷின் இயக்கத்தில் கேமியோ ரோலில்கூட நடிக்கத் தயார்.. நடிகர் ஜெயம் ரவி பளீச்!
  • PublishedMarch 4, 2023

நடிகர் ஜெயம் ரவி அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டில் பொன்னியின் செல்வன் வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.இந்நிலையில் தற்போது அவரது நடிப்பில் அடுத்தடுத்து அகிலன், பொன்னியின் செல்வன் 2 படங்கள் வெளியாகவுள்ளன.

ஜெயம் ரவியின் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் படம் அவருக்கு சிறப்பான வெற்றியை கொடுத்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவான இந்தப்படம் வெளியாகி சிறப்பான விமர்சனங்களையும் நல்ல வசூலையும் பெற்றுத் தந்துள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகியிருந்த இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர்.இந்தப் படத்தில் இளவரசராக, த்ரிஷாவின் தம்பியாக நடித்திருந்தார் ஜெயம் ரவி. முந்தைய பாகத்தை காட்டிலும் அடுத்த பாகத்தில் இவருக்கு கேரக்டர் இன்னும் மெருகேறியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28ம் தேதி பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.

முன்னதாக ஜெயம் ரவி நடிப்பில் மார்ச் 10ம் தேதி அகிலன் படம் ரிலீசாக உள்ளது. துறைமுகத்தை கதைக்களமாக கொண்ட இந்தப் படத்தின் சூட்டிங் தூத்துக்குடி, சென்னை காசிமேடு ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனால் சில பர்மிஷன்கள் வாங்குவதில் தாமதம் ஏற்பட்டதால் படத்தின் ரிலீசும் தாமதமானதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், அவற்றையெல்லாம் கடந்து இன்னும் சில தினங்களில் படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படம் ரிலீசாகவுள்ள நிலையில், அடுத்தடுத்து சைரன், இறைவன் என ஜெயம் ரவியின் படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. விரைவில் ஜெயம் ராஜாவுடன் ஜெயம் ரவி இணையும் தனி ஒருவன் படமும் சூட்டிங் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஜெயம் ரவி தனது தற்போதைய பேட்டியில் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டுள்ளார். மாநகரம் படத்தை ரிலீஸ் செய்த கையுடன் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அடுத்தப்படத்திற்காக தன்னை சிறப்பான கதையுடன் அணுகியதாகவும் ஆனால் அப்போது தன்னால் அந்த பிராஜெக்டில் நடிக்க முடியவில்லை என்றும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.சிறப்பான கேரக்டர் தனக்கு அமைந்தால் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க தான் தயாராக உள்ளதாகவும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். அது அடுத்தடுத்த படங்களில் வரும்படியான கேமியோ ரோலாக இருந்தால் சிறப்பாக இருக்கும் என்றும் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *