விஜய்யை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்; சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா?

விஜய்யை ஓரங்கட்டிய அல்லு அர்ஜுன்; சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா?
  • PublishedMarch 10, 2023

அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தப் படம் 2023 இறுதிக்குள் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதனைத் தொடர்ந்து அர்ஜுன் ரெட்டி பட புகழ் சந்தீப் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அல்லு அர்ஜுன்.இந்நிலையில், அல்லு அர்ஜுன் முதன்முறையாக பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளதாகவும், அதற்கு அவர் வாங்கும் சம்பளம் பற்றியும் தகவல் வெளியாகியுள்ளது.

தெலுங்கு திரையுலகின் ராக் ஸ்டாராக கலக்கி வரும் அல்லு அர்ஜுன், தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுக்க ரெடியாகிவிட்டாராம். அவரது நடிப்பில் 2021 இறுதியில் ரிலீஸான புஷ்பா திரைப்படம், ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. இந்தியா முழுவதும் ரிலீஸான புஷ்பா, பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கும் மேல் வசூலித்தது. அல்லு அர்ஜுனுடன் ஃபஹத் ஃபாஷில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

புஷ்பா முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் செகண்ட் பார்ட் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இந்நிலையில், முதன்முறையாக பாலிவுட்டிலும் நடிக்க உள்ளாராம் அல்லு அர்ஜுன். பூஷன் குமார் தயாரிக்கவுள்ள இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. அதேநேரம் இந்தப் படத்திற்காக அல்லு அர்ஜுன் 125 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புஷ்பா 2 ப்ரீ ரிலீஸ் பிசினஸ் ஆயிரம் கோடி ரூபாய் வரை நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. சாட்டிலைட் ரைட்ஸ், தியேட்டர் ரைட்ஸ், ஓடிடி உரிமை உட்பட ப்ரீ ரிலீஸ் பிசினஸ் மூலம் ஆயிரம் கோடி வரை வசூலித்துள்ளதாம். இதனால் பான் இந்தியா அளவில் தனது மார்க்கெட் உயர்ந்துள்ளதை பார்த்த அல்லு அர்ஜுன், 125 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம். பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் ஒரு படத்திற்காக 100 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார்.

அதேபோல் ஜூனியர் என்டிஆர், ராம் சரண் தலா 75 கோடி வரை சம்பளம் வாங்குகின்றனர். இவர்களை விடவும் பல மடங்கு அதிகமாக அல்லு அர்ஜுன் சம்பளம் கேட்டுள்ளது டோலிவுட்டையே மிரள வைத்துள்ளது. அங்கு மட்டும் இல்லாமல் கோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் விஜய்யை ஓவர்டேக் செய்துவிட்டதாக தெரிகிறது. விஜய் தற்போது 110 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கி வருகிறார். இதன்மூலம் தென்னிந்திய நட்சத்திரங்களில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக அல்லு அர்ஜுன் காணப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *