ஹேட்டர்ஸ்களுக்கு சிம்பு கொடுத்த பதிலடி.. வெளியானது பத்து தல டீசர் அப்டேட்

ஹேட்டர்ஸ்களுக்கு சிம்பு கொடுத்த பதிலடி.. வெளியானது பத்து தல டீசர் அப்டேட்
  • PublishedMarch 3, 2023

சிம்புவின் பத்து தல திரைப்படம் மார்ச் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பத்து தல படத்திற்கு சிம்பு டப்பிங் கொடுக்கவில்லை எனவும், இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாவதில் சிக்கல் எனவும் சொல்லப்பட்டது.ஆனால், சிம்புவின் ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பத்து தல டீம் டீசர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் கடந்தாண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் நடித்து முடித்தார் சிம்பு. கிருஷ்ணா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில படப்பிடிப்பு முடியாததால் அப்போது ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டது. அதன் பின்னர் வரும் மார்ச் 30ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்தது.

இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசைமைத்துள்ள பத்து தல படத்தில் இருந்து, நம்ம சத்தம் என்ற முதல் பாடல் சில தினங்களுக்கு முன்னர் வெளியானது. இதனைத் தொடர்ந்து சிம்புவின் போஸ்டர்களையும் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், தற்போது இந்தப் படத்தின் டீசர் நாளை (03) வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, நாளை மாலை 5.31 மணிக்கு பத்து தல டீசர் வெளியாகிறது.

பத்து தல டீசர் அப்டேட்டை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முக்கியமாக ‘புயலுக்கு முன் அமைதி’ என்ற கேப்ஷனுடன் பத்து தல டீசர் அப்டேட்டை வெளியிட்டுள்ளது படக்குழு. முன்னதாக சிம்பு தாய்லாந்தில் இருப்பதால் பத்து தல டப்பிங் பணிகளில் அவர் கலந்துகொள்ளவில்லை என செய்திகள் வெளியாகின. இதனால், இந்தப் படம் சொன்ன தேதியில் ரிலீஸாவது சந்தேகமே எனவும் கூறப்பட்டன. ஆனால், தற்போது ஹேட்டர்ஸ்களுக்கு பதிலடி கொடுக்கும் படி பத்து தல டீசர் அப்டேட் வெளியாகியுள்ளது.

கன்னடத்தில் சிவ ராஜ்குமார் நடிப்பில் ஹிட்டான முஃப்தி படத்தின் தமிழ் ரீமேக்காகதான் பத்து தல உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் ஏஜிஆர் என்ற கேங்ஸ்டராக சிம்பு நடித்துள்ளார். ஏற்கனவே ஏஜிஆர் கேரக்டரின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியிருந்தது. இந்நிலையில், நாளை வெளியாகவுள்ள பத்து தல டீசர் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்தப் படத்தின் ஆடியோ, ட்ரெய்லர் வெளியீட்டு விழா மார்ச் 18ம் தேதி நடைபெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே பத்து தல படத்தில் சிம்புவுக்காக ஏஆர் ரஹ்மானும் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக ப்ரோமோ வீடியோ ஒன்றை கிருஷ்ணா இயக்கியுள்ளாராம். அதில் ஏஆர் ரஹ்மான், ப்ரியா பவானி ஷங்கர், கெளதம் கார்த்திக் ஆகியோர் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், பத்து தல ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சிம்புவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வரும் எனவும் சொல்லப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *