நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் தோண்றும் கே.ஆர்.விஜயா!
நடிகை கே.ஆர். விஜயா அவர்கள் நீண்ட இடைவெளிக்கு பின் வெள்ளித்திரையில் தோண்றியுள்ளார்.
தி ஸ்பார்க்லேண்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் சந்திரா தயாரித்து நடிக்க, இயக்குனர் ரவி பார்கவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் மூத்தக்குடி.
ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தற்கால சூழலுக்கு ஏற்ப எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் கே.ஆர்.விஜயா அவர்கள் முக்கிய தோற்றத்தில் நடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இப்படத்தில் ‘மாயாண்டி குடும்பத்தார்’ படத்தின் கதாநாயகன் தருண்கோபி, ஆர்.சுந்தர்ராஜன், ராஜ் கபூர், சிங்கம்புலி, யார் கண்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் விரைவில் திரைக்கு வரும் எனவும் இயக்குனர் தெரிவித்துள்ளார்