ரஜினிக்காக ஸ்க்ரிப்ட் வேர்க்கை தொடங்கிய லோகேஷ்… லியோவை தொடர்ந்து அடுத்த ட்விஸ்ட்
ஜெயிலர் ஷூட்டிங்கில் பிஸியாக உள்ள ரஜினிகாந்த், அடுத்தடுத்து லால் சலாம், தலைவர் 170 படங்களில் நடிக்கவுள்ளார்.லால் சலாம் படத்தின் ஷூட்டிங் நேற்று முதல் தொடங்கிய நிலையில், விரைவில் தலைவர் 170 படத்தின் வேலைகளும் தொடங்கவுள்ளது.இதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக சொல்லப்பட்ட நிலையில், தற்போது இந்தப் படத்தின் ஸ்க்ரிப்ட் ஒர்க்கிங் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.
ரஜினி தற்போது நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. ரஜினி இதில் முத்துவேல் பாண்டியன் என்ற கேரக்டரில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவுக்கு வரவுள்ளதால், அடுத்தடுத்து லால் சலாம், தலைவர் 170 படங்களுக்காக தேதிகளை ஒதுக்கியுள்ளார் ரஜினி. இதன் தொடர்ச்சியாக ரஜினி லோகேஷ் இயக்கத்தில் நடிக்க விரும்புவதாக தகவல்கள் வெளியாகின.
ரஜினிக்கு கடைசியாக ஒரு ப்ளாக் பஸ்டர் இன்டஸ்ட்ரி ஹிட் கொடுக்க வேண்டும் என்பதே மிகப் பெரிய கனவாக உள்ளது. அதனால் தான் அவர் லோகேஷ் கனகராஜ் தனது கடைசி படத்தை இயக்க வேண்டும் என எதிர்பார்க்கிறாராம். இதுதொடர்பாக லோகேஷிடம் ரஜினியே பேசியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து நீண்ட நாட்களாக ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்புக்காக காத்திருந்த லோகேஷ், தற்போது ஸ்க்ரிப்ட் வேலைகளை தொடங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ். அடுத்து கைதி, விக்ரம் படங்களின் இரண்டாம் பாகத்தை டைரக்ட் செய்ய முடிவு செய்துள்ளார். முக்கியமாக கார்த்தியின் கைதி 2 ஷூட்டிங் இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என லோகேஷ் கூறியிருந்தார். இதனால், ரஜினியுடன் லோகேஷ் இணைந்தால், அதன் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என கேள்வி எழுந்துள்ளது. அதேநேரம் ரஜினியின் திரைப்படம் கன்ஃபார்ம் ஆனால், அதுவும் லோகேஷின் சினிமாட்டிங் கான்செப்ட்டில் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது.
கைதி படத்தில் இருந்து ஒரு லீட் எடுத்து அதன் சீக்வெலாக கமலின் விக்ரம் திரைப்படம் உருவானது. அதன் பிறகே LCU என்ற லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் கான்செப்ட்டை அறிமுகம் செய்தார். அதேநேரம் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ, LCU பின்னணியில் இன்னொரு யுனிவர்ஸாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது. அதேநேரம் கைதி, விக்ரம் படங்களில் நடித்த சில கேரக்டர்களும் லியோவில் இடம்பெற்றுள்ளதாம். அதேபோல் தான் ரஜினிக்கும் ஒரு தனி யுனிவர்ஸை கிரியேட் செய்யவுள்ளராம் லோகேஷ்.
கமலின் விக்ரம், விஜய்யின் லியோ, இதனுடன் ரஜினியின் திரைப்படம் என இந்த மூன்றுமே, தனித்தனி யுனிவர்ஸாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த மூன்று யுனிவர்ஸும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் இதுகுறித்து அபிஸியல் அப்டேட்ஸ் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், ஜெயிலர் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கும் ரஜினி, அடுத்து ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் நடிக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து தசெ ஞானவேல் இயக்கும் தலைவர் 170ல் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.