லைகாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – 170 படத்தின் அறிவிப்பு வெளியானது

லைகாவுடன் இணையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – 170 படத்தின் அறிவிப்பு வெளியானது
  • PublishedMarch 2, 2023
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 170 திரைப்படம் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. இந்திய சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். கடைசியாக இவருடைய நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்து தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், தமன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க உள்ள 170 திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ரஜினிகாந்தின் 170வது திரைப்படத்தை ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இந்த திரைப்படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *