விஜய் பட இயக்குநர்களை கார்னர் செய்யும் சல்மான் கான்

விஜய் பட இயக்குநர்களை கார்னர் செய்யும் சல்மான் கான்
  • PublishedMarch 2, 2023

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் நடித்துள்ள கிசி கா பாய் கிசி கி ஜான் திரைப்படம் ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது. இதனைத் தொடர்ந்து நவம்பரில் டைகர் 3 திரைப்படம் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், லோகேஷ் கனகராஜ், அட்லீ ஆகியோருக்கு சல்மான் கான் தனது படம் இயக்க ஆஃபர் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த வரிசையில் மேலும் ஒரு கோலிவுட் இயக்குநருக்கு சல்மான் கான் வலை வீசியுள்ளாராம். லோகேஷ், அட்லீ இருவர் உட்பட அந்த இயக்குநரும் விஜய் படங்களை இயக்கி பிரபலமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதம் ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படத்தில் சல்மான் கான் கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஸ்பை த்ரில்லர் ஜானரில் உருவாகியிருந்த இந்தப் படத்தில் டைகர் என்ற சீக்ரெட் ஏஜென்டாக என்ட்ரி கொடுத்த சல்மான் கான், ஷாருக்கானுடன் சேர்ந்து ஆக்‌ஷனில் மிரட்டியிருந்தார். ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்ற பதான், ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து ஃப்ர்ஹத் சம்ஜி இயக்கியுள்ள ‘கிசி கா பாய் கிசி கி ஜான்’ என்ற படத்தில் சல்மான் கான் நடித்துள்ளார். இந்தப் படம் ரம்ஜான் ஸ்பெஷலாக ரிலீஸாகிறது.

இந்தப் படத்தை அடுத்து சல்மான் கானின் டைகர் 3 இந்தாண்டு இறுதியில் வெளியாகிறது. இதற்கு அடுத்தபடியாக சல்மான் கான் நடிக்கும் படங்கள் குறித்து ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முக்கியமாக மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்கள் மூலம் இந்தியளவில் கவனம்

ஈர்த்தவர் லோகேஷ். அவர் தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்தை இயக்கி வருகிறார். அவருக்கு சல்மான் கான் தனது படத்தை இயக்க ஆஃபர் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதற்காக லோகேஷ் கனகராஜ்ஜுக்கு 50 கோடி ரூபாய் வரை சம்பளம் கொடுக்கவும் அவர் ரெடியாகவுள்ளாராம்.

அதேபோல், இன்னொரு பக்கம் அட்லீக்கும் சல்மான் கான் சைடில் இருந்து ஆஃபர் சென்றுள்ளதாம். தெறி, மெர்சல், பிகில் என விஜய்யுடன் மாஸ் காட்டிய அட்லீ, இப்போது பாலிவுட்டில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து மீண்டும் விஜய்யுடன் ஒரு படத்தில் கூட்டணி வைக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், அட்லீயிடம் கதை இருந்தால் கூறுமாறு மெசேஜ் கொடுத்துள்ளாராம் சல்மான் கான். இந்தக் கூட்டணி குறித்தும் விரைவில் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், சல்மான் கான் – பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த போக்கிரி படத்தை பிரபுதேவா தான் இயக்கினார். இதே படத்தை இந்தியில் வான்டட் என்ற டைட்டிலில் சல்மான் கானை ஹீரோவாக வைத்து இயக்கியிருந்தார். இந்தப் படம் அதிரிபுதிரி ஹிட்டானது. அதேபோல், தபங் 3, ராதே ஆகிய படங்களிலும் சல்மான் கான் – பிரபுதேவா கூட்டணி இணைந்திருந்தது. அதன் தொடர்ச்சியாக தற்போது சல்மான் கானின் வான்டட் இரண்டாம் பாகத்தை பிரபுதேவா இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக விஜய் பட இயக்குநர்களை சல்மான் கான் கார்னர் செய்துள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *