சங்கமித்ராவில் இணையும் விஷால்… ஜோடி சேரும் பூஜா ஹெக்டே

சங்கமித்ராவில் இணையும் விஷால்… ஜோடி சேரும் பூஜா ஹெக்டே
  • PublishedMarch 2, 2023

 

காஃபி வித் காதலை தொடர்ந்து சுந்தர் சி அரண்மனை 4 படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தற்போது அவர் விலகிவிட்டதாக சொல்லப்படுகிறது.

இதனிடையே 4 ஆண்டுகளுக்கு முன்பு சுந்தர் சி இயக்கவிருந்த சங்கமித்ரா திரைப்படம் மீண்டும் படப்பிடிப்புக்கு வரவுள்ளதாம். ஜெயம் ரவிக்கு பதிலாக விஷால் நடிக்கவுள்ளதாகவும் கடந்த சில தினங்களாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

சுந்தர் சி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான காஃபி வித் காதல் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனையடுத்து அரண்மனை 4ம் பாகத்தை இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சந்தானம் இருவரும் நடிப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் சம்பள பிரச்சினை காரணமாக விஜய் சேதுபதி விலகிவிட்டார் எனவும், அவருக்குப் பதிலாக சுந்தர் சி-யே ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்னொரு பக்கம் மீண்டும் சங்கமித்ரா படத்தை தொடங்கும் முடிவில் சுந்தர் சி தீவிரம் காட்டி வருகிறாராம்.

ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்க, ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையமைப்பாளராக கமிட் ஆன திரைப்படம் சங்கமித்ரா. தேனான்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தப் படத்தின் ஷூட்டிங் இன்னும் தொடங்கப்படவில்லை. இதனால் சங்கமித்ரா படத்தில் இருந்து ஜெயம் ரவி விலகியதாக சொல்லப்படுகிறது. மேலும், அவருக்கு பதிலாக விஷால் கமிட் ஆனதாகவும் செய்திகள் வெளியாகின.

முன்னதாக சங்கமித்ராவில் இருந்து ஸ்ருதிஹாசன் ஏற்கனவே விலகிவிட்டார். இந்தப் படத்திற்காக வாள் சண்டை பயிற்சி எல்லாம் எடுத்து வந்த அவர், ஷூட்டிங் தாமதமானதால் விலகியதாகக் கூறப்படுகிறது. அதேபோல், சங்கமித்ராவின் தயாரிப்பு உரிமையை தேனாண்டாள் ஃபிலிம்ஸிடம் இருந்து லைகா வாங்கியதாக தெரிகிறது. அதனால் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதோடு, விஷாலுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சங்கமித்ரா படத்திற்காக முதலில் 300 கோடி ரூபாய் பட்ஜெட் போட்டப்பட்டிருந்த நிலையில், தற்போது அது 450 கோடி வரை உயர்த்தப்பட்டுள்ளதாம். பூஜா ஹெக்டேவுக்கும் 5 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், 8ம் நூற்றாண்டில் நடக்கும் ஒரு பேரழகியின் கதையாக ஹிஸ்டாரிக்கல் ஜானரில் உருவாகவுள்ளதால், பூஜா ஹெக்டே நன்றாக ஸ்கோர் செய்யலாம் என ஓக்கே சொல்லியதாக தெரிகிறது.

சங்கமித்ரா டிராப் ஆனதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது மீண்டும் அந்தப் படத்தை தொடங்க சுந்தர் சி முடிவெடுத்துள்ளாராம். விஷால், பூஜா ஹெக்டே என புதிய கூட்டணியை களமிறக்கும் திட்டத்தில் உள்ள சுந்தர் சி, விரைவில் அப்டேட் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. சங்கமித்ரா அப்டேட் வெளியாகும் முன்பு அரண்மனை 4 ஷூட்டிங் தொடங்கிவிடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே லைகா தயாரிப்பில் பொன்னியின் செல்வன் பிரம்மாண்டமாக வெளியானதால், சங்கமித்ராவும் அதேபோல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *