பிரபல தயாரிப்பாளரின் மகள் 20 வயதில் மரணம்.. காரணம் என்ன தெரியுமா,
நடிகரும் தயாரிப்பாளருமான கிரிஷன் குமாரின் மகள் நேற்று காலமானார். அவருக்கு வயது 20. நீண்ட நாட்களாக புற்று நோயுடன் போராடிக்கொண்டிருந்த இவர் நேற்று உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளனர்.
மகளை இழந்து தவிக்கும் தயாரிப்பாளருக்கு பிரபலங்கள் பலரும் ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.
தயாரிப்பாளரின் மகளான திஷா குமார் செப்டம்பர் 6, 2003ஆம் ஆண்டு கிரிஷன் குமார் மற்றும் தன்யா சிங்கின் மகளாக பிறந்தார். திஷாவுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு பல ஆண்டுகளாக அதற்கான சிகிச்சை கொடுக்கப்பட்டு வருகிறது.
இவரது குடும்பம் சினிமாவில், பிரபலமாக இருந்த போதும், திஷா திரைப்பட விழாக்களிலோ, பொது நிகழ்ச்சியிலோ கலந்து கொண்டது இல்லை. இவர் கடந்த நவம்பர் மாதம், ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த அனிமல் படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு தனது தந்தையுடன் சேர்ந்து படம் பார்த்தார்.
இந்நிலையில், நீண்ட நாட்களாக கேன்சரால் போராடிக்கொண்டிருந்த திஷா குமார் நேற்று உயிரிழந்தார்.
திஷா குமாரின் இறுதிச்சடங்கு இன்று பிற்பகல் அவரது இல்லத்தில் நடைபெற உள்ளது.