அவசர சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்தார் ஷாருக்கான்… ரசிர்கள் அதிர்ச்சி

அவசர சிகிச்சைக்காக அமெரிக்கா பறந்தார் ஷாருக்கான்… ரசிர்கள் அதிர்ச்சி
  • PublishedJuly 30, 2024

ஷாருக்கான் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்றுள்ளதக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் ஷாருக்கான் நேற்று மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு கண் சிகிச்சைக்காகச் சென்றிருந்தார். ஆனால், அந்த மருத்துவமனையில் திட்டமிட்டபடி கண் சிகிச்சை நடக்காததால், ஷாருக் கான் கண் சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு சென்று இருப்பதாக கூறப்படுகிறது.

ஆனால், அவருக்கு எந்தவிதமான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்கிற எந்த விவரமும் தெரியவில்லை.

ஆனால், இந்தி பத்திரிக்கை ஒன்றில், ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்பே ஷாருக்கானுக்கு மும்பை மருத்துவமனை ஒன்றில், கண்புரைக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து இரண்டாவது கண்ணுக்கு சிகிச்சை செய்யப்பட்டது.

கண் சிகிச்சை செய்த போதும், அவரது கண்களில் சில பிரச்சனைகள் தொடர்ந்து இருந்ததால், அதற்காக ஷாருக்கான் தற்போது அமெரிக்கா சென்று இருப்பதாகவும் விரைவில் அவர் சிகிச்சை முடிந்து திரும்புவார் என்றும் அந்த பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *