நடிகர் சைஃப் அலி கான் மீது கத்தி குத்து! அதிர்ச்சியில் பாலிவுட்
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் வீட்டில் திருட வந்த நபர்களை தடுக்க முயன்றபோது நடிகர் சைஃப் அலி கானை திருடர்கள் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
அவர் லீலாவதி மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகை கரீனா கபூர் தனது கணவர் சைஃப் அலி கானுக்கு நேர்ந்த கத்திக் குத்து சம்பவத்தால் அதிர்ச்சியடைந்துள்ளார்.
திருட்டு முயற்சி மட்டும்தானா அல்லது கொலை முயற்சியா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன.