சைஃப் அலிகான் தாக்கப்பட்டதன் அதிர்ச்சி பின்னணி – 4 வயது மகன் தான் முதல் இலக்கு
சைஃப் அலிகான் வீட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர், அவருடைய 4 வயது மகனை பனையமாக வைத்து ரூ.1 கோடி கேட்டதாக பணிப்பெண் கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கொள்ளையன் ஒருவன், அவருடைய வீட்டில் புகுந்து கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது. இதன் பின்னணி குறித்து அவருடைய வீட்டு பணிப்பெண் கொடுத்த வாக்கு மூலம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் திரை உலகில், டாப் ஸ்டாராக இருப்பவர் சைஃப் அலிகான். முதல் மனைவியுடனான விவாகரத்துக்கு பின்னர், நடிகை கரீனா கபூரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு தைமூர் கான் மற்றும் ஜெஹாங்கீர் கான் என்கிற இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு, சைஃப் அலிகான் வசித்து வரும் பாந்த்ரா அடுக்கு மாடி குறியிருப்பு உள்ளே, ஃபயர் எக்ஸிட் வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையன் சைஃப் அலிகானை 6 இடத்தில் சரமாரியாக குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சைஃப் அலிகான் அந்த நபரை பிடிக்க முயன்ற போது இவருக்கு கத்தி குத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் ஜெஹாங்கீரை டார்கெட் செய்து அந்த கொள்ளையன் 1 கோடி கேட்டு மிரட்டியதாக சைஃப் அலிகான் வீட்டு பணிப்பெண் வாக்குமூலம் கொடுத்துள்ளார். கொள்ளையன் வீட்டுக்குள் புகுந்ததும், ஜெஹாங்கீர் அறைக்கு சென்றதாகவும், ஜெஹாங்கீரை பராமரித்து வரும், ஏலியம்மா பிலிப்ஸ் என்பவரை மிரட்டி ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும் என கேட்டுள்ளார்.
அப்போது அந்த கொள்ளையனிடமிருந்து குழந்தையை மீட்க எலியாம்மா முயன்ற போது அவரின் கையை கத்தியால் வெட்டி உள்ளார்.
எலியாம்மா சத்தம் போட்ட பின்னரே சைஃப் அலிகான் என்ன நடக்கிறது என பார்க்க உள்ளே வந்துள்ளார். அப்போது அந்த நபர் சைஃப் அலிகானிடம் ஒரு கோடி கேட்டு மிரட்டியது மட்டுமின்றி, தன்னுடைய குழந்தையை காப்பாற்ற அந்த நபரிடம் சண்டை போட முயன்றார்.
சுதாரித்து கொண்ட அவர் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க, சைப் அலிகானை ஆறு இடங்களில் சரமாரியாக குத்தி விட்டு, பின்னர் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த தகவலை எலியம்மா போலீசாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.