இந்த முறையாவது கண்டிப்பாக வெளிவருமா?…லால் சலாம்

இந்த முறையாவது கண்டிப்பாக வெளிவருமா?…லால் சலாம்
  • PublishedApril 3, 2025

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், விஷ்ணு விஷால், விக்ராந்த், சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க கடந்த வருடம் பிப்ரவரி 9ம் தேதி வெளியான படம் ‘லால் சலாம்’. எதிர்பாராத விதமாக படம் தோல்வியைத் தழுவியது.

ஒரு புதிய படம் வெளிவந்தால் நான்கு வாரங்களில் ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கம். ஆனால், ‘லால் சலாம்’ படத்தின் ஓடிடி வெளியீடு என்பது புரியாத புதிராகவே இருந்தது.

படத்தின் பல காட்சிகள் அடங்கிய ‘ஹார்ட் டிஸ்க்’ காணாமல் போனதால் படத்தில் அந்தக் காட்சிகளைச் சேர்க்க முடியவில்லை. அதுவும் படத்தின் தோல்விக்கு ஒரு காரணம் என இயக்குனர் தரப்பிலும் சொல்லப்பட்டது.

பல தேடல்களுக்குப் பிறகு காணாமல் போன ஹார்ட் டிஸ்க் கிடைத்தது. அதிலிருந்து காட்சிகளை எடுத்து மீண்டும் சேர்த்து ஓடிடி தளத்தில் வெளியிட முடிவு செய்தார்கள். அதனால்தான் ஓடிடி வெளியீடு தாமதமானது என்று சொல்லப்பட்டது.

இதனிடையே, நாளை தனியார் தொலைக்காட்சியின் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாக உள்ளதாக ஒரு செய்தி வெளிவந்துள்ளது. இது போல சில முறை இப்படி செய்தி வெளிவந்தாலும் படம் வெளியாகவில்லை. இந்த முறையாவது கண்டிப்பாக வெளிவருமா என்பது நாளை தெரிந்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *