கணவன் மனைவி பிரியாமல் இருக்க இதை தினம் சொன்னால் மட்டும் போதும்!
- PublishedFebruary 21, 2023
திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று நம் முன்னோர்கள் கூறுவதை கேட்டிருப்போம். அவ்வளவு சீக்கிரமாக எளிதில் பிரிக்க முடியாத பந்தமாக இருக்கக்கூடிய இந்த கணவன் மனைவி உறவில், இன்று இருக்கும் விரிசல்கள் சிறு சிறு வார்த்தைகளிலும், மனகசப்புகளிலும் உருவாகிறது. இதனால் பிரிய நினைக்கும் கணவன் மனைவிக்குள் நடக்கும் போராட்டம் மிகவும் மோசமானதாக இருக்கும். இவர்கள் இதிலிருந்து மீண்டு இருவரும் ஒற்றுமையாகவும், அன்னோன்யமாகவும் நீடூழி வாழ தினமும் சொல்ல வேண்டிய சக்தி வாய்ந்த மந்திரம் என்ன? இந்த மந்திரத்தின் பலன்கள் என்னென்ன? என்பதை தான் இந்த ஆன்மீக குறிப்பு தகவல்களின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.
ஶ்ரீ ராமரின் சக்தி வாய்ந்த மந்திரம்:
ஸ்ரீ ராமாய ராமபத்ராய ராமசந்திராய வேதசே ரகுநந்தாய நாதாய சீதாய பதயே நமஹ!!! மந்திரத்தின் பொருள்: ராமா, ராம, பத்ரா, ராமச்சந்திரா, ரகுநந்தன், நாதா என்று விதவிதமான பெயர்களில் அழைக்கப்படும் சீதையுடைய கணவனை வணங்குகிறேன் என்பது இதன் பொருளாகும்.
மந்திரம் உச்சரிக்கும் விதம் மற்றும் பலன்:
இந்த ராம மந்திரத்தை உச்சரிப்பவர்களுக்கு சொல்லாலும், மனதாலும் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை. சிறு சிறு விஷயங்களுக்கு கூட கோபித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வெறுத்துக் கொண்டு வாழும் இந்த சூழலை மாற்றி அமைக்கக்கூடிய சக்தி இந்த மந்திரத்திற்கு உண்டு. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள உந்துகோலாக அமையும் இந்த மந்திரத்தை தம்பதியரில் யாரோ வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்.
காலையில் குளித்து முடித்த பின்பு பூஜை அறையில் அமர்ந்து உங்களால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவு முறை உச்சரிக்கலாம். தம்பதியராக அமர்ந்து உச்சரித்தால் இன்னும் கூடுதல் பலன்கள் கிடைக்கும். அதே போல மாலையில் ஒரு முறை குளித்து முடித்துவிட்டு பூஜை அறையில் அமர்ந்து உச்சரிக்கலாம். இப்படி தொடர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி வருவதால் ராமரின் சீதை போல உங்களுடைய மனைவி உங்களையே சுற்றி வருவாராம்.
அதேபோல சீதையின் ராமனை போல உங்களுடைய கணவர் உங்களையே சுற்றி சுற்றி வருவார். இருவருக்கும் இருக்கும் மனகசப்புகள், வெறுப்புகள் நீங்கி ஒருவரை ஒருவர் மனதார ஏற்றுக்கொண்டு, பிரியும் எண்ணத்தில் இருந்து விடுபடுவதற்கு இந்த சக்தி வாய்ந்த மந்திரத்தை நீங்களும் சொல்லி பயன்பெறலாமே.
விஷ்ணு சஹஸ்ரநாமம்:
ஓம் ஸ்ரீ ராம ராம ராமேதி, ரமே ராமே மனோரமே, ஸஹஸ்ரநாம தத்துல்யம், ராம் நாம வரானனே!! சகஸ்ரநாமம் புகழ்: விஷ்ணு சகஸ்ரநாமத்தில் ராமனின் புகழைப் பாடக்கூடிய இந்த ஒரு ஸ்லோகம் சிவபெருமான் கூறுவதாக அமையப் பெற்றுள்ளது. இந்த ஸ்லோகத்தை முழுமையாக தினமும் உச்சரிப்பவர்களுக்கு எல்லா விதமான பலன்களும் கிடைப்பதாக ஐதீகம் உண்டு.
வாழ்க்கையில் ஏற்படும் இன்னல்கள், கஷ்டங்கள், துன்பங்கள், போராட்டங்கள், அவமானங்கள் எதுவாயினும் நம்மை விட்டு நீங்கி, நிம்மதி கிடைக்க இந்த மந்திரத்தை தினமும் காலை மாலை இருவேளையும் உச்சரிக்கலாம். வேண்டிய பலன் முழுமையாக கொடுக்கக்கூடிய இந்த மந்திரம் ராமனை புகழ்ந்தாலும் விஷ்ணு, சிவன், ராமன் என மூன்று கடவுளையும் வணங்கும் விதமாக இருக்கிறது.