மாஸ் ஸ்டார் மகேஷ்பாபுவின் புதிய அவதாரம்

மாஸ் ஸ்டார் மகேஷ்பாபுவின் புதிய அவதாரம்
  • PublishedOctober 7, 2025

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான மகேஷ்பாபு ஐதராபாத் நகரில் ஆர்.டி.சி எக்ஸ் ரோடில் எ.எம்.பி கிளாசிக் என்ற மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தை திறக்க உள்ளார்.

மொத்தம் 7 அரங்கங்கள் அடங்கிய அந்த மல்டிபிளக்ஸ் அடுத்த ஆண்டு பொங்கலுக்குத் திறக்கப்படும் எனத் தெரிகிறது.

இவர் சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில், கச்சிபவுலி என்ற இடத்தில் ‛ஏ.எம்.பி சினிமாஸ்’ என்ற மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தை திறந்திருந்தார். தற்போது மற்றுமொரு மல்டிபிளக்ஸ் திறக்க திட்டமிட்டுள்ளார்.

மகேஷ்பாபு தற்போது ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டப் படம் ஒன்றில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *