கணிப்புகளைத் தூக்கி எறிந்த பிக் பாஸ் 9: கடைசி நிமிடத்தில் நடந்த அந்த ‘மிராக்கிள்’ வெற்றி!

கணிப்புகளைத் தூக்கி எறிந்த பிக் பாஸ் 9: கடைசி நிமிடத்தில் நடந்த அந்த ‘மிராக்கிள்’ வெற்றி!
  • PublishedJanuary 18, 2026

100 நாட்களைக் கடந்து விறுவிறுப்பாக நடந்து வந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 9 இன்று ஒரு அதிரடியான முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீசன் ஆரம்பம் முதல் இறுதி வரை பல திருப்பங்களைக் கொண்டிருந்தாலும், க்ளைமாக்ஸ் யாரும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.

பார்வதி – கம்ருதீன்: கனவைச் சிதைத்த ரெட் கார்டு!
இந்த சீசனின் தொடக்கத்தில் இருந்தே வலுவான போட்டியாளர்களாகக் கருதப்பட்டவர்கள் விஜே பார்வதி மற்றும் கம்ருதீன். இவர்கள் இருவரில் ஒருவர்தான் டைட்டில் வெல்வார்கள் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனால்,”டிக்கெட் டூ ஃபினாலே” (Ticket to Finale) கார் டாஸ்க்கின் போது ஏற்பட்ட மோதல், இந்த சீசனின் தலைவிதியையே மாற்றியது. போட்டியாளர் சாண்ட்ராவை கார் டாஸ்க்கின் போது எட்டி உதைத்ததாக எழுந்த புகாரால் வீடே போர்க்களமானது. விதிமுறைகளை மீறியதைக் கண்டித்து, பிக் பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக விஜே பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகிய இருவருக்கும் ஒரே நேரத்தில் ‘ரெட் கார்டு’ (Red Card) கொடுத்து வெளியேற்றினார் பிக் பாஸ். இந்த ஒரு சம்பவம் தான் டைட்டில் வின்னர் யார் என்பதைத் தீர்மானிக்கும் புள்ளியாக அமைந்தது!

பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்!
மக்களின் ஆதரவைப் பெற்று டைட்டில் ரேஸில் இருந்த மற்றொரு முக்கியமான போட்டியாளர் கானா வினோத். ஆனால், அவர் கடைசி நேரத்தில் ரிஸ்க் எடுக்க விரும்பாமல், பிக் பாஸ் வழங்கிய பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு தானாகவே முன்வந்து போட்டியில் இருந்து விலகினார்.

முக்கிய போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இறுதிப் போட்டியில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் திவ்யா கணேஷ் இடையே கடும் போட்டி நிலவியது. ஆன்லைன் வாக்கெடுப்புகளில் விக்ரம் முன்னிலையில் இருந்தாலும், இறுதியில் திவ்யா கணேஷ் (அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின்படி) டைட்டில் வின்னர் என்று கூறப்படுகிறது.

வைல்டு கார்டு போட்டியாளராக நுழைந்து, அமைதியாகவும் நிதானமாகவும் விளையாடிய திவ்யா, விக்ரம் மற்றும் சபரிநாதனைப் பின்னுக்குத் தள்ளி கோப்பையைக் கைப்பற்றியது இந்த சீசனின் மிகப்பெரிய ‘எதிர்பாராத ட்விஸ்ட்’ ஆகப் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *