விருது வழங்கும் விழாவில் உச்சக்கட்ட கறுப்பு கவர்ச்சி உடை.. ட்ரெண்டிங்கான ராஷ்மிகா மந்தனா!
நடிகை ராஷ்மிகா மந்தனா இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக உள்ளார். அவரது புஷ்பா, வாரிசு உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா.
நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தில் கிர்க் பார்ட்டி என்ற படத்தின்மூலம்தான் சினிமாவில் அறிமுகமானார். காந்தாரா படப்புகழ் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ராஷ்மிகாவிற்கு சிறப்பான அறிமுகத்தை கொடுத்தது. தொடர்ந்து தெலுங்கில் வெளியான கீதா கோவிந்தம் படம் இவரை அடுத்தக்கட்டத்திற்கு நகர்த்தியது.இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். ராஷ்மிகாவை இந்திய அளவில் சிறப்பான நாயகியாக இந்தப் படம் வெளிக்காட்டியது. தொடர்ந்து அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா படம் சர்வதேச அளவில் சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் பெற்று ராஷ்மிகாவிற்கு சிறப்பாக கைக்கொடுத்தது.
தமிழில் கார்த்தியுடன் இணைந்து சுல்தான் என்ற படத்தில் தன்னுடைய என்ட்ரியை கொடுத்திருந்தார் ராஷ்மிகா. தொடர்ந்து கடந்த மாதத்தில் வெளியான விஜய்யின் வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாகியிருந்தார். இந்தப் படங்கள் தமிழிலும் ராஷ்மிகாவிற்கு ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்துள்ளது.
இந்தப் படங்களின் வெற்றி இவரை இந்திய அளவில் பான் இந்தியா நாயகியாக மாற்றியுள்ளது. அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியில் கமிட்டாகி நடித்து வருகிறார் ராஷ்மிகா. தொடர்ந்து சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதனிடையே தற்போது தனியார் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற ராஷ்மிகா மந்தனா, படு கவர்ச்சியான உடையுடன் வந்து அனைவரையும் கவர்ந்துள்ளார். தன்னுடைய உடல் அழகை அப்பட்டமாக வெளிப்படுத்தும் வகையில் ராஷ்மிகா அணிந்திருந்த இந்த உடை, கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது.இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தன்னுடைய இன்ஸ்டாகிராமில் இந்தப் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ராஷ்மிகா மந்தனா, தன்னுடைய வாழ்க்கையில் கிடைத்த அனைத்திற்கும் மற்றும் தன்னுடைய வாழ்க்கையில் தான் சந்தித்த நபர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.