பேசுபொருளாக மாறியுள்ள விஜயின் விவாகரத்து.
முன்னணி நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் குடும்ப வாழ்க்கை குறித்து புதிய தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படும் செய்தி தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது.
நீண்ட நாட்களாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், சட்டரீதியாக பிரிவதற்கான நடவடிக்கையாக கடந்த டிசம்பர் மாதம் சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து அதிகாரபூர்வமான அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வெளியாகியுள்ள தகவல்களின் படி, மனுவில் விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பல்வேறு கருத்துக்களை கிளப்பியுள்ளது.