உதவி செய்வதற்காக பிரமாண்டமாக இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சென்னையில் உள்ள ஸ்டூடியோவில் ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் லைட் மேன் குமார் என்பவர் தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
இந்த சம்பவம் ஏ.ஆர்.ரஹ்மானை மிகவும் பாதித்துள்ள நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் அந்த ஸ்டூடியோவே அடைத்துவிட்டாராம்.
அதுமட்டுமின்றி, படப்பிடிப்பு தளத்தில் லைட் மேன் சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் மரணம் மற்றும் ஏதேனும் காயங்கள் அடைந்தால் அவர்களை காப்பாற்ற நாம் ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை கச்சேரி நடத்த திட்டமிட்டுள்ளாராம்.
அதன்படி, ஏ.ஆர்.ரஹ்மான் இசைக்கச்சேரி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக வரும் மார்ச் 19ஆம் திகதி நடைபெறவுள்ளதாம்.
இந்த இசை நிகழ்ச்சியில் திரட்டப்படுகின்ற நிதி, அதன் மூலம் வருகிற நன்கொடை அனைத்தும் பாதிக்கப்படுவோரின் குடும்பத்திற்கு கொடுத்து உதவப்படவுள்ளதாம்.
விரைவில் டிக்கெட்கான முன் பதிவு தொடங்கும் என எதிர்பார்ப்படுகிறது. ஏற்கனவே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் சென்னையில் எப்போது இசை கச்சேரி நடத்துவீர்கள் என்று கேட்டிருந்தார்கள்.
அதற்கு பதில் அளித்த ரஹ்மான் நிகழ்ச்சி நடத்துவதற்கான அனுமதி கொடுக்கவே 6 மாதம் ஆகும் என தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து தற்போது அதற்கான அனுமதி எல்லாம் வாங்கி தற்போது இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.