வெற்றிமாறன் கேட்டாலும் முடியாது – தனுஷ் படத்திற்கு வந்த சோதனை!

வெற்றிமாறன் கேட்டாலும் முடியாது – தனுஷ் படத்திற்கு வந்த சோதனை!
  • PublishedJuly 18, 2023

வெற்றிமாறன், தனுஷ் கூட்டணியில் வெளிவந்த அத்தனை படங்களும் சூப்பர்  ஹிட் அடித்துள்ளது.  இந்த சூழலில் வெற்றிமாறன் ஒரு டைட்டிலுக்காக இயக்குனர் ஹரியிடம் கோரிக்கை விடுத்திருக்கிறார். இருந்தாலும் அதை தரமாட்டேன் என ஹரியும் விடாபிடியாக இருக்கிறாராம்.

அதாவது ஆடுகளம் உருவாகும் சமயத்தில் அந்த படத்திற்கு சண்டக்கோழி என்ற டைட்டில் தான் வைப்பதாக இருந்தது. ஆனால் அந்த சமயத்தில் விஷாலின் சண்டக்கோழி படம் ஷூட்டிங் தொடங்கப்பட்டு நடந்து வந்ததால் சேவல் என்ற பெயரை வைக்கலாம் என வெற்றிமாறன் முடிவு செய்திருக்கிறார்.

அதைத்தொடர்ந்து அந்த பெயரை பதிவு செய்வதற்காக சென்றபோது ஏற்கனவே இயக்குனர் ஹரி அதை ரெஜிஸ்டர் செய்துவிட்டார் என்று கூறியிருக்கிறார்கள். இதனால் ஏமாற்றம் அடைந்த வெற்றிமாறன் ஹரிக்கு போன் செய்து இந்த டைட்டில் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.

ஆனால் ஹரி அந்த டைட்டிலை கோவிலில் வைத்து பூஜை செய்து முடிவு செய்தோம். இல்லையென்றால் உங்களுக்கு கொடுத்திருப்பேன் என்றும் இப்போது கொடுக்க முடியாது என்றும் சென்டிமென்ட்டாக மறுத்திருக்கிறார். இதனால் சோர்ந்து போன வெற்றிமாறன் என்ன செய்வது என்று யோசித்து இருக்கிறார். அதைத்தொடர்ந்து பல கலந்தாலோசனைகளுக்கு பிறகு ஆடுகளம் என்ற டைட்டில் வைக்கப்பட்டதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *