படம் திருப்தியாக இல்லை – வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்த சரிதா!

படம்  திருப்தியாக இல்லை – வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுத்த சரிதா!
  • PublishedJuly 23, 2023

80 மற்றும் 90களில் தமிழ் சினிமாவின் முக்கிய கதாநாயகியாக இருந்தவர் நடிகை சரிதா. இவர் பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் நடித்த மாவீரன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சரிதா தற்போதைய பேட்டி ஒன்றில் தான் நடித்த படத்தின் ஃபர்ஸ்ட் காப்பியை பார்த்துவிட்டு படம் பிடிக்காததால் வாங்கிய சம்பளத்தை திருப்பி கொடுத்து விட்டதாக சொல்லி பரபரப்பை கிளப்பி இருக்கிறார்.

பேட்டியில் அவ்வாறு சொல்லி இருந்தாலும் யார் மனதையும் புண்படுத்தக் கூடாது என்பதற்காக சரிதா படத்தின் பெயரை சொல்லவில்லை.

இருந்தாலும் அந்த பேட்டியின் கமெண்ட்டுகளில் நெட்டிசன்கள் பலரும் அது வேதம் புதிது திரைப்படம் தான் அந்த படத்தில் தான் நடித்த கதாபாத்திரத்தில் மீது திருப்தி இல்லாததால் சம்பளத்தை திருப்பி கொடுத்து விட்டார் சரிதா என்று பதிவிட்டு வருகின்றனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *