1,500 கோடி சொத்துக்கு ஆசைப்பட்டு இப்படியுமா கல்யாணம் பண்ணுவாங்க? முன்னாள் கணவர் பகீர்

1,500 கோடி சொத்துக்கு ஆசைப்பட்டு இப்படியுமா கல்யாணம் பண்ணுவாங்க? முன்னாள் கணவர் பகீர்
  • PublishedMarch 31, 2024

1500 கோடி சொத்துக்களுக்கு அதிபதியாக இருக்கும் 60 வயது நடிகருக்கு 4-வது மனைவியான 44 வயது நடிகை குறித்து செய்திகள் வெளியாகி உள்ளன.

குறித்த நடிகையின் முன்னாள் கணவர் தான் சில தகவலை வெளியிட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் மாஸ் நடிகராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவரின் சகோதரரான நரேஷ் பாபுவும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். 60 வயதாகும் நரேஷ் பாபுவுக்கு ஏற்கனவே மூன்று முறை திருமணமாகி விவாகரத்தும் ஆகிவிட்டது.

அவர் முதலாவதாக டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீனுவின் மகளை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு ஒரு மகனும் உள்ளார். கருத்துவேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்து பிரிந்தார் நரேஷ் பாபு.

இதையடுத்து ரேகா சுப்ரியா என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டதால் ரேகாவையும் டைவர்ஸ் செய்துவிட்டார் நரேஷ் பாபு.

பின்னர் தனது 50வயதில் ரம்யா ரகுபதி என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார் நரேஷ். இந்த உறவும் விவாகரத்தில் தான் முடிந்தது. இதையடுத்து 60வயதில் நடிகை பவித்ரா லோகேஷ் மீது காதல் வயப்பட்டார் நரேஷ்.

இருவரும் லிவ்விங் டுகெதராக வாழ்ந்து வந்த நிலையில் கடந்தாண்டு மார்ச் மாதம் நரேஷை முறைப்படி திருமணம் செய்துகொண்டார் பவித்ரா லோகேஷ்.

நரேஷின் நான்காவது மனைவியான பவித்ராவுக்கு வயது 44, இவரும் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்திருக்கிறார். நடிகை பவித்ரா லோகேஷும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். இந்த நிலையில், பவித்ரா லோகேஷ் குறித்து அவரது முதல் கணவர் சுரேந்திர பிரசாத் பகீர் தகவலை வெளியிட்டுள்ளார்.

அதன்படி பவித்ரா லோகேஷ் ஆடம்பர வாழ்க்கையை விரும்புபவர் என்பதால் தான் அவர் நரேஷ் பாபுவை திருமணம் செய்துள்ளதாகவும், காசுக்காக அவர் என்னவேண்டுமானாலும் செய்வார் எனவும் கூறி இருக்கிறார்.

அதுமட்டுமின்றி நரேஷ் பாபுவிடம் 1500 கோடி சொத்து இருப்பதன் காரணமாக தான் அவருக்கு 4-வது மனைவியாக பவித்ரா லோகேஷ் சம்மதித்து உள்ளதாகவும் சுரேந்திர பிரசாத் கூறி இருக்கிறார். அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *