ஆதிபுருஷ் படத்தை பார்க்க அந்த கடவுளே நேரில் வருகின்றார்!! என்ன அதிசயம் தெரியுமா?

ஆதிபுருஷ் படத்தை பார்க்க அந்த கடவுளே நேரில் வருகின்றார்!! என்ன அதிசயம் தெரியுமா?
  • PublishedJune 6, 2023

பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமா உருவாகி உள்ள திரைப்படம் ஆதிபுருஷ். இப்படத்தை ஓம் ராவத் இயக்கி உள்ளார். இராமாயணத்தை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கி உள்ளனர்.

இதில் ராமராக பிரபாஸ் நடித்துள்ளார். சீதையாக கீர்த்தி சனோனும், ராவணனாக பாலிவுட் நடிகர் சையிப் அலிகானும் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது.

ஆதிபுருஷ் திரைப்படம் வருகிற ஜூன் 16ஆம் திகதி ரிலீஸ் ஆக உள்ளது. சுமார் ரூ.600 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு உள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ஆதிபுருஷ் படத்தின் ரிலீஸ் நெருங்கி வருவதால் அப்படத்திற்கான புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், ஆதிபுருஷ் படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதிபுருஷ் திரைப்படம் ரிலீஸ் ஆகும் அனைத்து தியேட்டர்களிலும் ஒரு சீட் மட்டும் அனுமனுக்காக ஒதுக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்திய திரைப்பட வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில், கடவுளுக்காக தியேட்டரில் ஒரு இருக்கை ஒதுக்கப்படுவது இதுவே முதன்முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *