60 வயதில் 3ஆவது காதலியை அறிமுகம் செய்து வைத்தார் அமீர்கான்

பாலிவுட் நடிகர் அமீர்கான் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது மூன்றாவது காதலியை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்தி திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான் தனது 60 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக அமீர்கான் நேற்றிரவு மும்பை பந்த்ராவில் உள்ள இல்லத்தில் ரசிகர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது தனது நீண்ட கால தோழி கவுரி ஸ்ப்ராட்டுடனான உறவை உறுதி செய்தார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவருடன் உறவில் இருப்பதாகவும் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
அப்போது அமீர்கான் கூறுகையில், “கவுரியும் நானும் 25 ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்தோம். இப்போது நாங்கள் இருவரும் பார்னர்களாக இருக்கிறோம். ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக சேர்ந்து வாழ்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
அமீர்கான் இதற்கு முன் இரண்டு முறை விவாகரத்து ஆனவர். 2002 இல் முதல் மனைவி ரீனா டட்டாவை விவாகரத்து செய்த அவர் அடுத்து 2005 ஆம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். அவரையும் 2021 இல் அமீர்கான் விவாகரத்து செய்துவிட்டார்.
அமீர்கானின் மூன்றாவது காதலியான கவுரி ஸ்ப்ராட்டிற்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு வயதில் மகன் உள்ளார். பெங்களூரில் வசித்து வரும் கவுரி ஸ்ப்ராட்டின் தாய் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.