ஒவ்வொரு நாளும் பதட்டத்துடன் ஆரம்பிக்கும் சூட்டிங்….

ஒவ்வொரு நாளும் பதட்டத்துடன் ஆரம்பிக்கும் சூட்டிங்….
  • PublishedMarch 21, 2025

சல்மான் கான், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள படம் சிக்கந்தர். இந்த படம் மார்ச் 30ம் தேதி திரைக்கு வருகிறது. தற்போது இப்படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார் முருகதாஸ்.

அப்போது அவர் அளித்த ஒரு பேட்டியில், சல்மான்கானுக்கு கொலை மிரட்டல் இருந்து வருவதால் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்தும்போது ஒவ்வொரு நாளும் பதட்டத்திலேயே இருந்தேன்.

அதன் காரணமாகவே அவர் படப்பிடிப்பு தளத்துக்கு வந்த அனைத்து நாட்களுமே படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிய அத்தனை ஜூனியர் கலைஞர்களையும் சோதனை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இதற்காக ஒவ்வொரு நாளும் இரண்டு மணி நேரத்தை எடுத்துக் கொண்டோம். இதனால் பல நாட்களில் படப்பிடிப்பு தாமதமானது. ஏற்கனவே சல்மான்கான் தனக்கு பலத்தை செக்யூரிட்டி போட்டிருந்தபோதும், படப்பிடிப்பு நடைபெற்ற இடங்களில் படக்குழு சார்பிலும் கூடுதல் செக்யூரிட்டி போட்டு பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தோம் என்று தெரிவித்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *