பிரபல கலை இயக்குனர் தற்கொலை.. அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்

பிரபல கலை இயக்குனர் தற்கொலை.. அதிர்ச்சியில் பாலிவுட் திரையுலகம்
  • PublishedAugust 2, 2023

பாலிவுட்டில் பிரபல கலை இயக்குனராக இருந்தவர் நிதின் தேசாய். ‘தேவதாஸ்’, ‘முன்னபாய்’, ‘ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மும்பை’ ‘ஜோதா அக்பர்’, ‘லகான்’ உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் கலை இயக்குனராக பணியாற்றியவர்.

அவரது கலை திறன் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Renowned art director Nitin Desai dies by

30 ஆண்டுகளாக பாலிவுட் உலகில் கலக்கி வரும் அவர், 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றி வருகிறார்.

மும்பை அருகே கர்ஜாத் என்ற இடத்தில் 52 ஏக்கர் பரப்பளவில் சொந்தமாக என்டி ஸ்டுடியோஸ் நிறுவனம் ஒன்றை அமைத்து நிர்வகித்து வந்தார். அந்த ஸ்டுடியோவில் தான் பல பிரம்மாண்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டன.

பன்முக திறமைக் கொண்ட அவர், இயக்கம், தயாரிப்பு உள்ளிட்டவைகளிலும் கவனம் செலுத்தி வந்தார். தனது சிறந்த கலை நுணுக்களுக்காக இதுவரை 4 முறை தேசிய விருதுகளையும்,

பிலிம்பேர் உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்நிலையில் தனது ஸ்டுடியோவில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். அவரது தற்கொலை பாலிவுட் உலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது தற்கொலைக்கான காரணம், நிதி நெருக்கடி என்று கூறப்படுகிறது. இது குறித்து மும்பை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *