பிக் பாஸ் சீசன் 7; வெளியேறப் போவது இவர்கள்தான்

பிக் பாஸ் சீசன் 7; வெளியேறப் போவது இவர்கள்தான்
  • PublishedNovember 25, 2023

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் இருந்து, இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ள நிலையில், அவர்கள் யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.

கடந்த வாரம் கானா பாலா வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் நடந்த பூகம்பம் டாஸ்கில் ஹவுஸ் மேட்ஸ் தோற்றதால் இரண்டு போட்டியாளர்கள் வெளியே செல்வதும், அவர்களுக்கு பதிலாக இரண்டு போட்டியாளர்கள் உள்ளே வருவதும் உறுதியாகியுள்ளது.

தற்போது வரை உள்ளே வர உள்ள அந்த இரண்டு பழைய போட்டியாளர்கள் யார் என்பது குறித்து, எந்த தகவலும் வெளியாகாத நிலையில், இந்த வாரம் நடந்த டபுள் ஏவிக்ஷனில் வெளியேறிய போட்டியாளர்கள் குறித்த தகவல் கசிந்துள்ளது. பிக்பாஸ் ரசிகர்களின் கணிப்பு படி, இந்த வாரம் அக்ஷயா மற்றும் பூர்ணிமா ரவி ஆகிய இருவர் வெளியேற்றப்படலாம் என கூறினர். இதன் மூலம் மாயாவின் புல்லி கேங்கில் இருந்து முக்கிய போட்டியாளர் வெளியேற்றப்படுவார். இதன் பின்னர் மீண்டும் ஆட்டம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, ரசிகர்களின் கணிப்பு தவறாகி போகி… எலிமினேஷனில் அதிரடி ட்விஸ்ட் அரங்கேறி உள்ளது. அதன்படி இந்த வாரம் அக்ஷயா மற்றும் பிராவோ ஆகிய இருவர் தான் பிக் பாஸ் வீட்டில் இருந்து, வெளியேற்றப்பட்டுள்ளனர். மற்ற போட்டியாளர்கள் சேவ் என்று கூறப்படுகிறது. அதேநேரம் இந்த வாரம் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய உள்ள பழைய போட்டியாளர்கள் இருவர் யார் என்பதையும் பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *