தினம் தினம் வேதனையில் துடிக்கும் காஜல்! நெகிழ்ச்சியான பதிவு

தினம் தினம் வேதனையில் துடிக்கும் காஜல்! நெகிழ்ச்சியான பதிவு
  • PublishedMay 19, 2023

நாள்­தோ­றும் தன் மகனை விட்டுவிட்டு படப்­பி­டிப்­புக்­குக் கிளம்­பும்போது தன்­ம­னம் வேதனை­யில் துடிப்­ப­தா­கச் தென்னிந்திய பிரபல நடிகை காஜல் அகர்­வால் தெரிவித்துள்ளார்.

இதற்­காக பெற்ற மகனை அலட்­சி­யப்­ப­டுத்­து­வ­தாக யாரும் கரு­தி­வி­டக் கூடாது என்­றும் தன் மக­னுக்கு முன்னால் ஒரு பல­மான தாயாக நிற்­ப­தையே தாம் விரும்­பு­வ­தா­க­வும் அவர்­ஒரு பேட்­டி­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.

“இன்­னும் பச்சிளம் குழந்தை­யாக உள்­ள என்­ மக­னுக்­காக உரிய நேரத்தை ஒதுக்­கு­கி­றேன். அன்பைப் பகிர்­வ­தி­லும் குறை வைப்­ப­தில்லை. என் மக­னின் தேவை­கள் நிறை­வே­று­வதை உறுதி செய்­வ­து­டன், எனது திரைப்­பட பணி­க­ளை­யும் உரிய வகை­யில் திடட்­மிட்­டுக் கொள்­கி­றேன்.

“யார் என்ன நினைத்­தா­லும் எனக்­குக் கவ­லை­யில்லை. முதன் முறை­யாக என் மகனை மார்­போடு அணைத்­த­போது நன்­றாக வளர்க்க முடி­யுமா எனப் பயந்­தேன். ஆனால் எல்­லா­வற்­றை­யும் மெல்ல மெல்ல கற்­றுக்­கொண்டு வரு­கி­றேன். குழந்தை வளர்ப்பை முன்­வைத்து என்­னைச் சிலர் கேலி­யும் கிண்­ட­லும் செய்­கின்­ற­னர். அவர்­க­ளைப் பற்றி நான் கவ­லைப்­ப­டு­வ­தில்லை,” என்­கி­றார் காஜல் அகர்­வால்.

இதேவேளை காஜல் அகர்வால் அண்மையில் கண் அழகு தொடர்பான புதிய படைப்பு ஒன்றை அறிமுகப்படுத்தி பெண் தொழிலதிபரானமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *