தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் ‘போலா சங்கர்’… புதிய அப்டேட்….
தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சிரஞ்சீவி, தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ‘போலா சங்கர்’. இந்த படம் தமிழில் அஜித் நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘வேதாளம்’ படத்தின் ரீமேக்காகும். அண்ணன் – தங்கை சென்டிமென்ட்டை வைத்து தமிழில் உருவாகி வரவேற்பை இந்த படம் தெலுங்கிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெஹர் ரமேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ஏகே எண்டர்டைமண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் நடிகை தமன்னா கதாநாயகியாகவும், கீர்த்தி சுரேஷ் தங்கை கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில் நடிகர் சிரஞ்சீவி தனது பகுதி டப்பிங்கையும் நிறைவு செய்தார்.
இதனால் தயாரிப்பு பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் வரும் ஜூலை 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
Get ready for the
MEGA ENTERTAINING ACTION spectacle😎Mega🌟@Kchirutweets' #BholaaShankar TRAILER ON JULY 27th ❤️🔥
Stay Tuned 🤟🏻
A film by @MeherRamesh @AnilSunkara1 @tamannaahspeaks @KeerthyOfficial @iamSushanthA @SagarMahati @dudlyraj @BholaaShankar @adityamusic… pic.twitter.com/qQLqvYYJ0d
— AK Entertainments (@AKentsOfficial) July 23, 2023